Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நின்னு பௌலிங் போடுவாரு... அதுதான் அவரோட சிறப்பு... ஜோப்ரா ஆர்ச்சர் பாராட்டு யாருக்கு?

சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடருக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஜஸ்பிரீத் பும்ராவின் நிலையான பௌலிங் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்,

மேலும் இந்தியாவின் முதல் 6 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதாகவும் எதிரணி பௌலர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டி துவக்கம்

டெஸ்ட் போட்டி துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் முதல் துவங்கி நடைபெறவுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தங்களது குவாரன்டைனை முடித்துக்கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ச்சர் பாராட்டு

ஆர்ச்சர் பாராட்டு

இந்நிலையில் இங்கிலாந்தின் முக்கிய பௌலரான ஜோப்ரா ஆர்ச்சர் இந்திய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். பும்ரா நிலைத்து நின்று பௌலிங் செய்வார் என்று அவர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த திறமையால் தனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

எதிரணி பௌலர்களுக்கு அச்சுறுத்தல்

எதிரணி பௌலர்களுக்கு அச்சுறுத்தல்

இதையடுத்து தனக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடிய இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்ச்சர், இந்தியாவின் முதலில் ஆடக்கூடிய 6 பேட்ஸ்மேன்களும் சிறப்பான பேட்ஸ்மேன்கள் என்றும் அவர்கள் அனைவருமே எதிரணி பௌலர்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடியவர்களே என்றும் அவர் மேலும் கூறினார்.

35 போட்டிகளில் 46 விக்கெட்டுகள்

35 போட்டிகளில் 46 விக்கெட்டுகள்

இந்தியாவில் ஐபிஎல்லில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளார் ஆர்ச்சர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ள ஆர்ச்சர் 35 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக சிறப்பான திட்டங்களுடன் வந்துள்ளதாகவும் இந்த தொடர் இங்கிலாந்துக்கு சிறப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, February 3, 2021, 18:38 [IST]
Other articles published on Feb 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+