Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்சோட திட்டமெல்லாம் தெரியும்... என்கிட்ட பலிக்காது... ஷிகர் தவான் அதிரடி!

துபாய் : ஐபிஎல்லின் இன்றைய தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டமெல்லாம் தனக்கு தெரியும் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

மேலும் அணியின் பிரித்வி ஷா பதற்றமில்லாமல் ஆட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மும்பை -டெல்லி அணிகள் மோதல்

மும்பை -டெல்லி அணிகள் மோதல்

இன்றைய தகுதிச்சுற்று போட்டி ஒன்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக தோற்கும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் மோதும்.

ஏற்கனவே தெரியும்

ஏற்கனவே தெரியும்

அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் மோதும். வரும் 10ம் தேதி ஐபிஎல்லின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே தனக்கு தெரியும் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் குறிப்பிட்டுள்ளார்.

தயக்கம் இல்லை

தயக்கம் இல்லை

கடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார் ஷிகர் தவான். இந்நிலையில், மும்பையின் பும்ரா, டிரெண்ட் போல்ட் மற்றும் பாட்டின்சன் ஆகியோரின் பந்துவீச்சை அதிகமாகவே எதிர்கொண்டுள்ளதால் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிரெஷ்ஷாக எதிர்கொள்ள வேண்டும்

பிரெஷ்ஷாக எதிர்கொள்ள வேண்டும்

தற்போதைய சூழலில் தன்னை ரிலாக்சாக வைத்துக் கொள்வது மட்டுமே முக்கியம் என்றும் அதன்மூலம் தான் பிரெஷ்ஷாக போட்டியை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களின் பௌலிங் குறித்த வீடியோக்களை தான் மீண்டும் பார்க்கவுள்ளதாகவும் அவர்களின் திட்டங்கள் எல்லாம் தனக்கு தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஹானேவின் நிலையான ஆட்டம்

ரஹானேவின் நிலையான ஆட்டம்

அணியின் பிரித்வி ஷா பதற்றமின்றி விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கடினமான முயற்சிகளை மேற்கொள்ளாமல் தன்னுடைய எனர்ஜியை வீணாக்காமல் அவர் விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அஜிங்க்யா ரஹானே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் தான் சுதந்திரமாக விளையாடுவதாகவும் கூறினார்.

Story first published: Thursday, November 5, 2020, 11:59 [IST]
Other articles published on Nov 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+