Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா விளையாடுவேன்.. 4ம் வரிசையில் என்னை இறக்குங்க.. நான் ரெடியாக இருக்கேன்…!

மும்பை:அணி நிர்வாகம் சரி என்று சொன்னால் 4ம் வரிசையில் விளையாட தயார் என்று கேஎல் ராகுல் கூறியிருக்கிறார்.

உலக கோப்பையில் இந்திய அணியில் 4ம் வரிசை என்பது இன்னும் குழப்பமாக தான் இருக்கிறது. யாரை அந்த இடத்தில் இறக்குவது என்பது முடிவாகாமல் நீண்டு கொண்டு போகிறது. அனேகமாக, மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் அல்லது ராகுல் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்திய அணியின் சமீபத்திய ஆட்டத்தை வைத்து பார்த்தால் உலக கோப்பையில், ராகுல் அணியில் இடம்பெறும் வாய்ப்பு மிக குறைவு. தவான், ரோகித், கோலி என இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 4ம் இடத்தில் யார் களமிறங்குவார் என்று தெரியவில்லை. விஜய் சங்கர் களமிறக்கப்பட்டால் ராகுலுக்கு அணியில் இடம்பெற முடியாது.

நுணுக்கங்கள் தெரியும்

நுணுக்கங்கள் தெரியும்

இந் நிலையில் அணி நிர்வாகம் ஒத்துக்கொண்டால், 4ம் வரிசையில் தாம் இறங்க தயாராக இருப்பதாக கே எல் ராகுல் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: தற்போது மிடில் ஆர்டர் பேட்டிங் நுணுக்கங்களை நன்கு அறிந்து வைத்துள்ளேன். எந்த வரிசையிலும் தான் களமிறங்க தயாராக உள்ளேன்.

சிறந்த பேட்டிங்

சிறந்த பேட்டிங்

தேர்வுக்குழு ஒரு முடிவெடுத்துவிட்டு தான் என்னை அணியில் தேர்வு செய்துள்ளனர். அணி நிர்வாகம் என்னை எந்த இடத்தில் களமிறக்க முடிவு செய்தாலும், அந்த வரிசையில் களமிறங்கி சிறப்பாக ஆடுவேன். கடைசி 2 மாதங்களாக என்னுடைய சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளேன்.

நம்பிக்கை இருக்கிறது

நம்பிக்கை இருக்கிறது

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டி என்னுடைய பேட்டிங் மீது அதிக கவனம் செலுத்த தூண்டியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன். அதுவே முழு நம்பிக்கையை அளித்துள்ளது என்றார்.

இடம்பிடித்தார்

இடம்பிடித்தார்

கே.எல்.ராகுல் இந்தியா ஏ அணியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஓடிஐ மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றார்.

ஐபிஎல் சாதனை

ஐபிஎல் சாதனை

இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் 50 ரன்களும் 2வது போட்டியில் 47 ரன்களையும் விளாசினார். 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் I பஞ்சாப் அணிக்காக 53.90 சராசரியுடன் 593 ரன்களை குவித்து இவ்வருட ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தார்.

Story first published: Saturday, May 18, 2019, 11:59 [IST]
Other articles published on May 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+