Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. இந்திய அணிக்காக விளையாட தயார்.. ரஹானே ஓபன் டாக்!

சென்னை: இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அதற்கு தயாராக இருப்பேன் என்று சிஎஸ்கே வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கற்பனைக்கும் எட்டாத சர்ப்ரைஸ்களை அனைத்து அணிகளும் அளித்து வருகிறது. குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் உடல்நிலை பிரச்சனை காரணமாக மொயின் அலி விலகினார். இதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவ வீரர் ரஹானே களமிறங்கினார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

I am ready to take chances to play in WTC final for India says CSK Player Ajinkya Rahane in IPL 2023

ஆனால் சேஸிங்கின் போது சென்னை அணி ரன் ஏதும் எடுக்காமல் கான்வே விக்கெட்டை இழந்து சிக்கலில் சிக்கிய போது ரஹானே களமிறங்கினார். அப்போது தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரஹானே 19 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, சென்னை அணியை டிரைவர் சீட்டில் அமர வைத்தார். இறுதியாக 27 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இது சென்னை அணி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களுக்கும் ஆச்சரியம் கொடுத்தது.

இதனால் ரஹானேவை இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. ஐபிஎல் தொடருக்கு பின் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் ரஹானே சேர்க்க வேண்டும் என்று பலரும் பேசி வருகின்றனர். ஏனென்றால் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. அதேபோல் பும்ராவும் பங்கேற்பது சந்தேகம் தான்.

அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இதனால் ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் ரஹானேவுக்கு இருப்பதால், அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து ரஹானேவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, என்ன நடந்தாலும், நான் எனது முயற்சியை கைவிடப் போவதில்லை. ஒருவேளை மீண்டும் இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அதற்கு தயாராக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, April 10, 2023, 18:16 [IST]
Other articles published on Apr 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+