Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் அணி கேப்டனான பிறகு தாடியில் 40 நரைமுடி வந்துள்ளது: பிரஸ் மீட்டில் கோஹ்லி சேட்டை

மொகாலி: மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா பெயரிலான கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை, 3-2 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நாளை தொடங்குகிறது.

டி20 மற்றும் ஒருநாள் போட்டித்தொடர்களை டோணி தலைமையில் எதிர்கொண்ட இந்திய அணி, கோஹ்லி தலைமையில் டெஸ்ட் போட்டித்தொடரை எதிர்கொள்கிறது. பயிற்சிக்கு நடுவே இன்று நிருபர்களுக்கு கேப்டன் கோஹ்லி பேட்டியளித்தார்.

120 சதவீத அர்ப்பணிப்பு

120 சதவீத அர்ப்பணிப்பு

கோஹ்லி கூறியதாவது: விமர்சனங்களை பற்றி யோசித்து நான் நேரத்தை விரையமாக்கமாட்டேன். நான் மைதானத்தில் களமிறங்கும்போதெல்லாம் 120 சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வோடுதான் களமிறங்குகிறேன். வயதுக்கேற்ற அனுபவத்தோடு, எனது சக்தியை எங்கு சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ளேன்.

அஸ்வின் வேற லெவல்

அஸ்வின் வேற லெவல்

டெஸ்ட் போட்டி என்பது பேட்ஸ்மேன்களுக்கானது கிடையாது. பவுலர்களால்தான் டெஸ்ட் போட்டியை வென்று தர முடியும். இந்தியாவை பொறுத்தளவில் அஸ்வின்தான் இந்த டெஸ்ட் போட்டியின் துருப்புச் சீட்டு. அஸ்வின் தனது ஆட்டத்தை வேறு லெவலுக்கு உயர்த்திக்கொண்டுள்ளார். உலகின் டாப்-3 ஸ்பின் பவுலர்களில் அஸ்வினும் ஒருவர்.

பிட்ச் கிடக்குது

பிட்ச் கிடக்குது

நாங்கள் பிட்ச் எப்படி உள்ளது என்று பார்க்கப்போவதில்லை. எங்களது ஆட்டத்தின்மீது மட்டுமே கவனம் வைப்போம். ஒவ்வொரு வீரரும் தன்னால் ஆட்டத்தில், முக்கிய பங்களிப்பை அளிக்க முடியும் என்ற எண்ணத்தில்தான் ஆட வேண்டும்.

பேட்ஸ்மேன் தேவை

பேட்ஸ்மேன் தேவை

4 பந்து வீச்சாளர்களுடன் ஆட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது. அவரே 10 முதல் 15 ஓவர்கள் சிறப்பாக பந்து வீசகூடியவராகவும் இருப்பது சிறப்பு. பிட்ச் தன்மையை பார்த்து பவுலர்கள் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.

சவாலை சமாளி

சவாலை சமாளி

சேலஞ்ச்சான நேரத்தில் சிறப்பாக ஆடுவதுதான் எனக்கு பிடிக்கும். தென் ஆப்பிரிக்க அணி தற்போது இந்தியா மீது சவாலை தூக்கிப்போட்டுள்ளது. தவறுகளில் இருந்து பாடம் கற்று, அந்த சவாலை முறியடிப்போம். ஒருநாள் தொடரில் தோற்றதை பற்றி கவலைப்பட்டு நேரத்தை விரையம் செய்யவில்லை.

நோ மோதல்

நோ மோதல்

மகாத்மாகாந்தி-நெல்சன் மண்டேலா இருவரும் அமைதிக்காக உழைத்தவர்கள். அவர்கள் பெயரை கொண்ட இந்த கிரிக்கெட் தொடரில் வீரர்களிடையே தனிப்பட்டமுறையில் மோதல் இருக்க கூடாது என்பதே எனது நோக்கம். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

40 நரைமுடி

40 நரைமுடி

கேப்டன் பதவி உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற நிருபரின் கேள்விக்கு, "டெஸ்ட் அணிக்கு கேப்டனான பிறகு நான் எந்த விதத்திலும் மாறவில்லை. கேப்டனான பிறகு மாறியுள்ள ஒரே விஷயம், எனது தாடியில், 40 நரைமுடி தோன்றியுள்ளது (சந்தேகமிருந்தா எண்ணி பார்த்துக்கோங்க என்பாரோ?). வேறு எந்த வகையிலும் எனக்குள் மாற்றம் ஏற்படவில்லை. எப்போதும் நான் ஒரே மாதிரிதான் உள்ளேன்" என்று கோஹ்லி பதிலளித்தார்.

Story first published: Wednesday, November 4, 2015, 12:57 [IST]
Other articles published on Nov 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+