Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்சர்களை விளாச தோள்பட்டையில் இருந்து எனக்கு சக்தி வருது..! அசத்தும் அதிரடி மன்னன்

Recommended Video

Russle Hitting Secrets: சிக்சர் அடிக்கும் சக்தி எங்கிருந்து வருது.. ரஸ்ஸல் ஓபன் டாக்- வீடியோ

கொல்கத்தா: சிக்சர்களை விளாசும் சக்தி, என்னுடைய தோள்பட்டையில் இருந்து வருகிறது ஆண்ட்ரரூ ரசல் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நேற்றிரவு முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் மல்லுகட்டின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்ப முதலே சிறப்பாக ஆடியது. இறுதியாக கொல்கத்தா 20 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 232 ரன்கள் குவித்தது. களத்தில் ரசல் 80 (6 பவுண்டரி, 8 சிக்சர்), கார்த்திக்15 ரன்களுடன் இருந்தனர்.

திணறிய பவுலர்கள்

திணறிய பவுலர்கள்

ரசலை கட்டுப்படுத்த வழி தெரியாமல் மும்பை கேப்டன் ரோகித் விழி பிதுங்கினார். எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் பவுலர்கள் திண்டாடினர். ஆப்சைடுக்கு வெளியே பந்து வீசினாலும் அதையும் விடாமல் நொறுக்கி தள்ளினார்.

அசுரத்தன பேட்டிங்

அசுரத்தன பேட்டிங்

ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய ரசல், பும்ரா, மலிங்காவின் பந்துகளையும் விட்டுவைக்கவில்லை. அவரது அசுரத்தனமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி மலைப்பான ஸ்கோரை எட்டிப்பிடித்தது. லின் 54, கில் 76 ரன்கள் அடித்தனர்.

ரோகித் ஆட்டமிழப்பு

ரோகித் ஆட்டமிழப்பு

பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்கத்திலே கேப்டன் ரோகித் 12, டி காக் 0 ரன்களில் வெளியேறினார்கள். பின்னர் வந்த லூயிஸ் 15, சூரியகுமார் 26,பொல்லார்ட் 20 ரன்களில் வெளியேறினார்கள்.

விளாசிய பாண்டியா

விளாசிய பாண்டியா

ஆனால் ஒரு புறம் விக்கெட்டுகள் சென்றாலும் ஹர்டிக் பாண்டியா கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்தார்.பாண்டியா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 91 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இதில் 9 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.

வென்ற கொல்கத்தா

வென்ற கொல்கத்தா

இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே அடித்தது.இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.

சக்தி இருக்கும் இடம்

சக்தி இருக்கும் இடம்

போட்டி குறித்தும், தமது ஆட்டம் குறித்தும் ரசல் கூறியதாவது:கண்களுக்கும், கைகளுக்கும் இருக்கும் ஒற்றுமையே எனது வேகமான ஆட்டத்துக்கு காரணம். அது மட்டுமல்ல... சிக்சர்கள் அடிக்க எனக்கு தோள்பட்டையில் இருந்து சக்தி வருகிறது. உடல்நிலையை பிட்டாக வைத்திருந்தால் தான் இப்படி அசுரத்தனமாக விளையாட முடியும் என்றார்.

Story first published: Monday, April 29, 2019, 13:07 [IST]
Other articles published on Apr 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+