Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுடன் தொடர்ச்சியாக பேசி வருகிறேன்.. மறைமுகமாக சொன்ன ரோகித் சர்மா.. அப்போ அப்படி இருக்குமோ?

கொழும்பு: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. இலங்கை அணியை வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி யாராலும் மறக்க முடியாத சம்பவத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியப் படை சாதித்துள்ளது. இதனால் ஆசியக் கோப்பை வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

I have been talking to Ravichandran Ashwin on the Phone says Rohit Sharma after the Asia Cup 2023 Finals

இதனிடையே ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக அக்சர் படேல் காயம் காரணமாக விலகியதால், உடனடியாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் இறுதிப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது ஆச்சரியமளித்தது. முன்னணி ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் சேர்க்கப்படாமல் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர். இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்தார். இந்திய அணி வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், ஸ்பின்னர் + ஆல்ரவுண்டருக்கான இடத்தில் ஏராளமான வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். குறிப்பாக அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இந்திய அணி கண் வைத்திருக்கிறது.

ரவிச்சந்திரன் அஸ்வினிடம் தொடர்ச்சியால சொல்போனில் பேசி வருகிறேன். ஏனென்றால் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படக் கூடிய வீரர்கள் அதிக தேவையாக இருக்கிறார்கள். நேற்றைய நாளின் கடைசி நேரத்தில் தான் அக்சர் படேலின் காயம் குறித்து தெரிய வந்தது. இதனால் எங்கள் பட்டியலில் இருந்த சில வீரர்களுக்கு உடனடியாக செல்போன் மூலமாக அழைத்தோம். அவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவர்களின் திட்டம் குறித்து அறிந்தோம்.

அந்த நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் பெங்களூரில் உள்ள என்சிஏவில் ஆசியப் போட்டிகள் தொடருக்கான பயிற்சியில் இருந்தார். அதனால் உடனடியாக அவரை இலங்கைக்கு அழைத்தோம். அவரும் அக்சர் படேலின் ரோலை சிறப்பாக செய்யக் கூடிய வீரர் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஆசியக் கோப்பை உலகக்கோப்பைத் தொடரில் ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் என்று 3 ஸ்பின்னர்களில் யார் காயமடைந்தாலும், அவர்களுக்கான மாற்று வீரர்களையும் இந்திய அணி தயார் நிலையில் வைத்துள்ளது.

உலகக்கோப்பை தொடர் நீண்ட தொடர் என்பதால் எந்த வீரர் எப்போது காயமடைவார் என்பது தெரியாது. இதனால் முக்கிய வீரர்கள் மீது இந்திய அணி நிர்வாகம் கண் வைத்திருக்கிறது. இதனால் உலகக்கோப்பை தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, September 18, 2023, 10:13 [IST]
Other articles published on Sep 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+