Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எத்தனை முறை அக்ரம் பவுலிங்க பார்த்திருக்கிறேன்.. அதுல கத்துக்கிட்டதுதான்.. சீக்ரெட்டை உடைத்த பும்ரா!

அகமதாபாத்: வாசிம் அக்ரம் மற்றும் வாக்கர் யூனுஸ் ஆகியோரின் பந்துவீச்சை பல முறை வியந்து பார்த்திருப்பதாகவும், அவர்களிடம் இருந்து பாராட்டை பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்திய வீரர் பும்ரா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், சிராஜ், ஹர்திக், பும்ரா மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

I have seen Waqar Younis and Wasim Akram bowl some magical deliveries and get his nod is great says Jasprit Bumrah

இதில் சொந்த மண்ணில் களமிறங்கிய நட்சத்திர வீரர் பும்ரா 7 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு மெய்டன் ஓவர் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக முகமது ரிஸ்வான் மற்றும் ஷதாப் கான் ஆகியோருக்கு பும்ரா வீசிய பந்தை அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2018 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மிட்செல் மார்ஷ்-க்கு வீசிய ஸ்லோயர் யார்க்கர் மிகச்சிறந்த பந்துகளில் ஒன்றாகும்.

அந்த வகையில் முகமது ரிஸ்வானுக்கு வீசிய ஆஃப் கட்டர் பந்து மிகச்சிறந்த பந்தாக அமைந்தது. இந்த பந்தை பார்த்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், வாக்கர் யூனுஸ் உள்ளிட்டோரும் பாராட்டினர். இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது. அப்போது பும்ரா பேசுகையில், எப்போதும் ஆடுகளத்தின் தன்மை புரிந்து கொள்ளவே அதிகமாக முயற்சிப்பேன். ஆடுகளம் மிதமாக இருப்பதை அறிந்த பின், கடினமான லெந்தில் வீச முடிவு செய்தேன். இளம் வீரராக இருக்கும் போது சீனியர்களிடம் அதிக கேள்விகளை கேட்பேன்.

அப்போது கேள்விகளுக்கு கிடைத்த பதில், இப்போது உதவி அளிக்கிறது. சீனியர்களிடம் நான் எழுப்பிய கேள்விகள் அவர்களுக்கு பல நேரங்களில் தொல்லையாக இருந்துள்ளது. ஆனால் இப்போது ஆடுகளம் பற்றியும், வெவ்வேறு முயற்சிகளை செய்யவும் அந்த அனுபவமே உதவியாக உள்ளது. ரிஸ்வான் விக்கெட்டை பொறுத்தவரை, மிடில் ஓவர்களில் ஜடேஜாவின் பந்துகளில் கொஞ்சம் டர்ன் ஆவதை அறிந்தேன்.

நான் எப்போதும் எனது ஸ்லோயர் பந்துகளை ஸ்பின்னர்களை ஸ்லோயர் பந்துகளாக எண்ணுவேன். அது இன்று எனக்கு பலனளித்துள்ளது. ஷதாப் கான் விக்கெட்டை பொறுத்தவரை, பந்தின் சில பகுதிகளில் பிட்சாகும் போது ரிவர்ஸாவதை அறிந்தேன். வாக்கர் யூனிஸ் மற்ரும் வாசிம் அக்ரம் இருவரின் மேஜிக் பந்துகளை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, October 14, 2023, 22:01 [IST]
Other articles published on Oct 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+