இந்திய பேட்ஸ்மேன்களிடம் எப்படி வம்பு செய்ய போகிறேன் என்பதை பாருங்கள்.. ஜான்சன் மிரட்டல்!
சிட்னி: இந்திய பேட்ஸ்மேன்களை சீண்டி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவேன், இந்த போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகிறது பாருங்கள்.. என்று மிரட்டியுள்ளார், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன்.
ஆஸ்திரேலியாவுடன் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில், இந்திய பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவை, ஆங்கிலத்தில் பேசுமாறு கூறி ஆஸி. பேட்ஸ்மேன் வார்னர் தகராறு செய்தார். இதன்பிறகு வார்னர், அந்த சம்பவத்தை விளக்கி கூறி, இனிமேல் அப்படி நடக்காது என்றும் உறுதியளித்தார்.

ஒரு திரில்
இந்நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் வேறு மாதிரி பிளான் வைத்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், "விளையாட்டில், இதுபோல ஸ்லெட்ஜிங் செய்வது சகஜமானது. அப்போதுதான், விளையாட்டில் ஒரு பொழுது போக்கும், திரில்லும் இருக்கும்.

இந்தியாவிடம் பாருங்கள்
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், இதுபோன்ற சுவாரசியத்தை நீங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம்.

அது எப்படி இருந்தது
பாகிஸ்தான் வீரர் வகாப் ரியாஸ் மற்றும் வாட்ன் இடையே நடந்த ஸ்லெட்ஜிங் பிரச்சினை ஆட்டத்தையே சுவாரசியமாக மாற்றியது. அதுபோன்ற ஆட்டத்தைதான் நான் விரும்புகிறேன்.

வம்பு சண்டை வேண்டும்
ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வார்டனர் எதுவும் பேசாமல் இருந்தாலும், நான் சீண்டல் செய்யத்தான் போகிறேன். எங்காவது ஸ்லெட்ஜிங் செய்ய ஆள் தேவை என்றால் அங்கு முதல் ஆளாக நான்தான் இருப்பேன். இவ்வாறு ஜான்சன் தெரிவித்தார்.

இவங்களுக்கு இதே வேலை பாஸ்
இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான டெஸ்ட் தொடரின்போதும், ஜான்சன் இந்திய வீரர்களை சீண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. விளையாடி வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்படும்போது, எதிரணி வீரர்களின் கவனத்தை சீர்குலைக்க ஆஸ்திரேலிய அணியினர் இவ்வாறு குறுக்கு வழியை நாடிவருவது காலம்காலமாக தொடருகிறது. நாளைக்கு என்னென்ன கூத்து இருக்கிறதோ.. பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications