அந்த 4ம் நம்பரு எனக்கு ரொம்ப பிடிக்கும்… ப்ளீஸ்..கொடுத்திருங்க… ஹலோ… பிசிசிஐ..! கேட்டுச்சா?
கொல்கத்தா: கிரிக்கெட்டில் 4ம் இடம் எனக்கு பிடிச்ச இடம் என்று இளம்வீரர் அஜிங்கியா ரகானே விருப்பதை தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. அதற்காக இந்திய அணி அமெரிக்கா பறந்திருக்கிறது. முதல் 20 ஓவர் போட்டியில் தட்டு, தடுமாறி வெற்றி பெற்றது.
வழக்கம் போல இந்த முறையும் 4ம் இடத்துக்கு யார் என்ற பிரச்னை தலை தூக்கி இருக்கிறது. உலக கோப்பை முடிந்தும் அந்த விவகாரம் ஓயவில்லை. உலக கோப்பையில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ரகானே, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

4ம் இடம் பற்றி கிண்டல்
இந்நிலையில் கொல்கத்தாவில் பெங்கால் கிரிக்கெட் சங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரகானே மேடையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: விழாவில் என்னை நான்காவதாக மேடைக்கு அழைத்து இருக்கிறீர்கள். எனக்கு பிடித்த இடம் 4 என்று கிண்டலாக பேச தொடங்கினார்.

தினமும் பயிற்சி
தொடர்ந்து அவர் பேசியதாவது: மும்பையில் கடும் மழை பெய்து வருவதால் பெங்களூரில் உள்ள பயிற்சி அகாடமியில் தினமும் பயிற்சி செய்து வருகிறேன். அங்கு டிராவிட் உள்ளார். அவர் தான் எனது ரோல் மாடல்.

ஆர்வமாக இருக்கிறேன்
அவருடன் அங்கு பயிற்சி பெறுவது மகிழ்ச்சி. மேலும் அடுத்து வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நான் என்னுடைய திறமையை வெளிக்காட்ட ஆர்வமாக காத்திருக்கிறேன்.

சிறப்பாக ஆடுவேன்
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி பலமான அணியாக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பின்பற்ற வேண்டும். அதனால் இந்த தொடரில் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications