Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் குடும்பத்துல அங்கமா இருக்கறது உற்சாகமா இருக்கு.. டிரெண்ட் போல்ட்

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கமாக இருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக நியூசிலாந்து பௌலர் டிரெண்ட் போல்ட் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் யூஏஇயின் வெயிலை சமாளிப்பதுதான் மிகவும் சிரமமான மற்றும் சவாலான செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பன்முக திறமைகளை கொண்ட பௌலிங் அணியில் இணைந்துள்ளது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் உலகின் பல பகுதிகளில் விளையாடியுள்ள வீரர்கள் அணியில் இருப்பது சிறப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5வது கோப்பைக்காக தீவிரம்

5வது கோப்பைக்காக தீவிரம்

யூஏஇயில் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சி மேற்கொண்டுள்ளனர் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியினர். வரும் 19ம் தேதி சிஎஸ்கே அணியுடனான முதல் போட்டியில் இவர்கள் மோதவுள்ள நிலையில், இந்த சீசனிலும் கோப்பையை கைகொண்டு, ஐந்தாவது கோப்பையை கைப்பற்ற அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

சிறப்பான டிரெண்ட் போல்ட்

சிறப்பான டிரெண்ட் போல்ட்

அணியின் முக்கிய வீரர், லசித் மலிங்கா, சொந்த காரணங்களால் இந்த சீசனில் விளையாடாமல் விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக அணியில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் கருதப்படுகிறார். இவர் கடந்த ஆண்டு டெல்லி கேபிடல்சில் இடம்பெற்ற நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

திறமையான வீரர்கள்

திறமையான வீரர்கள்

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் போன்ற அமைதியான குடும்பத்தில் அங்கமாக உள்ளது உற்சாகத்தை அளிப்பதாக டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்சின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசிய போல்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலிங் பிரிவில் பல நாடுகளில் விளையாடியுள்ள திறமையான வீரர்கள் இருப்பதாகவும் பெருமை தெரிவித்துள்ளார்.

சமாளிப்பது சிரமம்

சமாளிப்பது சிரமம்

தற்போதைய சூழலில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் யூஏஇ போன்ற நாட்டின் வெப்பநிலையில் விளையாடுவதே மிகவும் சவாலான விஷயம் என்று டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து போன்ற சிறிய நாட்டில் தற்போதைய சூழலில் 7 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்துவிட்டு யூஏஇயின் சூழலுக்கு மாறுவது மிகவும் கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, September 14, 2020, 19:46 [IST]
Other articles published on Sep 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+