Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் பதவியில இருந்து என்னை நீக்கினதுக்கு இதுவரைக்கும் காரணம் தெரியலை... சுனில் கவாஸ்கர்

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் வெற்றி பெற்றிருந்தும் தன்னை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதாகவும் அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Cricket Nepotism: Arjun Tendulkar & Rohan Gavaskar, Aakash Chopra Opens Up

கடந்த 1978-79ல் அப்போதைய கேப்டன் சுனில் கவாஸ்கரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வெங்கடராகவனை கேப்டனாக பிசிசிஐ நியமித்தது.

மேலும் செலக்ஷன் கமிட்டியின் ஒரு உறுப்பினராக கேப்டன் இருந்தாலும், அங்கு அவருடைய அறிவுரைகள் எதுவும் செல்லுபடியாகாது என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்

கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்

கடந்த 1978-79களில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. அந்த அணியை இந்தியா வெற்றி கொண்டது. இந்த தொடரில் 732 ரன்களை கேப்டன் சுனில் கவாஸ்கர் குவித்திருந்தார். இருந்தபோதிலும் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வெங்கடராகவனை கேப்டனாக பிசிசிஐ நியமித்தது.

நீக்கத்திற்கான காரணம் தெரியவில்லை

நீக்கத்திற்கான காரணம் தெரியவில்லை

கேப்டன் பதவியிலிருந்து தன்னை நீக்கியதற்கான காரணம் இதுவரை தனக்கு தெரியவில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தன்னுடைய மிட்-டே காலத்தில் இதுகுறித்த கருத்துக்களை பகிர்ந்துள்ள சுனில் கவாஸ்கர், அப்போது கெர்ரி பேக்கரின் உலக சீரிஸ் கிரிக்கெட் தொடரில் இணைய தான் ஒப்புதல் அளித்தது தன்னை கேப்டன் பதவியிலிருந்து நீக்க காரணமாக இருக்கலாம் என்று யூகிப்பதாகவும் கூறியுள்ளார்.

பேடியை நீக்கும் தீர்மானம்

பேடியை நீக்கும் தீர்மானம்

அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் 6 விக்கெட்டுகளை மட்டுமே பிஷன் சிங் பேடி எடுத்திருந்த நிலையில், அவரை அணியிலிருந்து நீக்க பிசிசிஐ தீர்மானித்திருந்ததாகவும், அதன்பிறகு தொடர்ந்த தன்னுடைய வலியுறுத்தல்களின் பேரில் அவர் மீண்டும் அணியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டதாகவும் கவாஸ்கர் மேலும் கூறினார்.

எந்த வாய்சும் இல்லை

எந்த வாய்சும் இல்லை

ஆயினும் 1979ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரே பேடிக்கு இறுதி தொடராக அமைந்ததாகவும் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். மீண்டும் தான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட போது திரஜ் பர்சானா மற்றும் மறைந்த ராஜேந்தர் கோயல் ஆகியோரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சேர்க்க முயற்சித்ததாகவும் ஆனால் எதுவும் செல்லுபடியாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். செலக்ஷன் கமிட்டியில் கேப்டன் ஒரு உறுப்பினராக இருந்தாலும் அவருக்கு அங்கு எந்த வாய்சும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, June 29, 2020, 18:30 [IST]
Other articles published on Jun 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+