Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்குள்ள கிரிக்கெட் ஆசை இன்னும் அதிகமா இருக்கு... சுரேஷ் ரெய்னா

டெல்லி : கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ள சுரேஷ் ரெய்னா, தனக்குள் கிரிக்கெட் ஆர்வம் இன்னும் உள்ளதாகவும், இந்திய அணியில் இடபெற தான் செயலாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Raina Rohit Sharma Instagram chat | Rohit backs Raina

இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுடன் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து மீண்டும் விளையாட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்ட இருவரும், தோனி மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ரெய்னா -ரோகித் சர்மா உரையாடல்

ரெய்னா -ரோகித் சர்மா உரையாடல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ஈடுபடுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் நேரலையில் ஈடுபட்டனர்.

ஜெர்சி அணிந்து விளையாட ஆசை

ஜெர்சி அணிந்து விளையாட ஆசை

கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் உள்ள சுரேஷ் ரெய்னா, தனக்குள் கிரிக்கெட் ஆசை மற்றும் திறமை இன்னும் குறையவில்லை என்றும் மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் எறு தான் ஆசையுடன் உள்ளதாகவும் அதற்கான பயிற்சிகளில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரெய்னா மீண்டும் விளையாட வேண்டும்

ரெய்னா மீண்டும் விளையாட வேண்டும்

இதனிடையே ரெய்னா மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாட வேண்டும் என்று ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார். அணி வீரர்கள் அனைவரும் இதை எதிர்பார்ப்பதாகவும், ஆனால், இந்த முடிவு தேர்வுக்குழுவினரிடம் உள்ளதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் விளையாட விருப்பம்

மீண்டும் விளையாட விருப்பம்

இதேபோல முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும் இந்திய அணியில் இடம்பெற்று மீண்டும் விளையாட வேண்டும் என்று ரோகித் மற்றும் ரெய்னா இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவருடைய திட்டம் என்ன என்பது குறித்து தெரியாது என்றும் ஆனால், ஐபிஎல் பயிற்சி ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடியதாகவும் தற்போதும் பிட்னசுடன் உள்ளதாகவும் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, May 13, 2020, 12:35 [IST]
Other articles published on May 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+