ப்பா... மென்ட்டலா எவ்ளோ வலிமையா இருக்காரு... கத்துக்கணும்... நெகுமா போன்னர் சொல்லியிருக்காரு!
செயின்ட் கேத்தரின் பாரீஸ் : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் மட்டுமின்றி கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடினார் சத்தீஸ்வர் புஜாரா.
நெருக்கடி நேரங்களில் அணிக்கான இவரது செயல்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட்டின் நவீன தூண் என்ற பாராட்டிற்கு இவர் உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் புஜாரா மனதளவில் மிகுந்த வலிமையுடன் காணப்படுவதாகவும் அவரிடம் இருந்து அதை தான் கற்க விரும்புவதாகவும் மேற்கிந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டர் நெகுமா போன்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான புஜாரா
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் சத்தீஸ்வர் புஜாரா. பந்த்துடன் இணைந்து இவர் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

சிறப்பான பங்களிப்பு
மேலும் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது. அதிலும் இறுதி குறிப்பாக இறுதி போட்டியில் விக்கெட் விழாமல் இருக்க ஆஸ்திரேலிய பௌலர்களின் பந்துகளை தனது உடலில் தாங்கி இவர் மேற்கொண்ட பிரயத்தனங்கள் பெரிதாக பேசப்பட்டது.

நவீன தூண்
இந்தியாவின் நவீன கிரிக்கெட்டின் தூணாக கருதப்படும் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மொத்தமாக 521 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் இவர் பெற்றார்.

கற்க நெகுமா விருப்பம்
இந்நிலையில் புஜாராவின் மன வலிமை மிகவும் சிறப்பானது என்றும் அவரிடம் இருந்து அதை தான் கற்க விரும்புவதாகவும் மேற்கிந்திய தீவுகளின் ஆல்-ரவுண்டர் நெகுமா போன்னர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரின் பேட்டிங்கை தொடர்ந்து தான் பார்த்து வருவதாகவும் அவரின் சிறப்பான பேட்டிங் தனக்கு வியப்பளிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

முதல் போட்டியில் 85 ரன்கள்
தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்காக வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர் 86 ரன்களை குவித்துள்ளார். இந்த போட்டியில் வங்கதேசத்தின் 395 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications