Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையை விட பெஸ்ட் ஐபிஎல் தான்… என்ன இவரு… இப்படி பொசுக்னு சொல்லிட்டாரு

மும்பை:உலக கோப்பை கிரிக்கெட்டை விட ஐபிஎல் தொடர் தான் சிறந்தது என்று அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறி இருக்கிறார்.

ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 11 சீசன்கள் வெற்றி கரமாக முடிந்துவிட்டது. தற்போது 12வது சீசன் தொடங்கி முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. ஐபிஎல் தொடரை தொடர்ந்து, வரும் 30ம் தேதி ஐசிசி உலக கோப்பை தொடங்குகிறது.

அதே நேரத்தில் ஐபிஎல் தொடரை மற்ற நாடுகளும் பின்பற்றி வருகின்றன. பிக் பேஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், மசான்சி சூப்பர் லீக் (தென்னாப்பிரிக்கா), ஆப்கானிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தந்த தொடர்களுக்கு என்றே ரசிகர்களும் உருவாகிவிட்டனர்.

தாராளமான பணம்

தாராளமான பணம்

எத்தனை தொடர்கள் வந்தாலும், ஐபிஎல்லுக்கு என்று தனி மவுசு இருக்கிறது. காரணம்... அதற்கு பணம். ஐபிஎல் தொடரில் ஏலம் முதல் விளம்பரம் வரை கோடிக்கணக்கில் பணம் புழங்குகின்றது. இது தவிர.. வீரர்களை ஊக்குவிக்க கொண்டுவரப்பட்டுள்ள புதிய முறைகளும் ஒரு காரணம்.

கூடுதல் விருதுகள்

கூடுதல் விருதுகள்

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், மற்ற கிரிக்கெட் தொடர்களில் ஆட்ட நாயகன் விருதுடன் சேர்த்து கூடுதலாக ஒரு விருது வழங்கப்படும். ஆனால் ஐபிஎல்லில் சூப்பர் ஸ்டிரைக்கர், கேம் சேஞ்சர், சிறந்த கேட்ச், ஸ்டைலிஷ் வீரர், ஆட்ட நாயகன் என ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. வீரர்களுக்கும் பணம் கொட்டோ... கொட்டென்று கொட்டுகிறது. வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிக அளவு ஆர்வமடைய இது முக்கிய காரணம்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், மற்ற கிரிக்கெட் தொடர்களில் ஆட்ட நாயகன் விருதுடன் சேர்த்து கூடுதலாக ஒரு விருது வழங்கப்படும். ஆனால் ஐபிஎல்லில் சூப்பர் ஸ்டிரைக்கர், கேம் சேஞ்சர், சிறந்த கேட்ச், ஸ்டைலிஷ் வீரர், ஆட்ட நாயகன் என ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. வீரர்களுக்கும் பணம் கொட்டோ... கொட்டென்று கொட்டுகிறது. வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிக அளவு ஆர்வமடைய இது முக்கிய காரணம்.

டி 20 தொடர்

டி 20 தொடர்

ஐபிஎல் தொடரின் முக்கியத்துவம் உலக கோப்பை தொடரை கூட லேசாக மிரள வைக்கிறது என்று சொல்லலாம். உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவரும் தென் ஆப்ரிக்க அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் ஐபிஎல் குறித்து முக்கிய விஷயம் ஒன்றை பேசி இருக்கிறார்.

பல்வேறு தொடர்கள்

பல்வேறு தொடர்கள்

அவர் கூறியிருப்பதாவது: உலக கோப்பை கிரிக்கெட்டை விட ஐபிஎல் தொடர் தான் சிறந்தது. இதை ஒரு வாதத்துக்காக சொல்லவில்லை. உண்மையாகவே எனது கருத்து அதுதான். ஐபிஎல் தொடரின் அருகில் மற்ற எந்த தொடரும் வர முடியாது. பல்வேறு நாடுகளில் உள்ள லீக் தொடர்களில் ஆடி இருக்கிறேன்.

ஐபிஎல் சிறந்தது

ஐபிஎல் சிறந்தது

ஐபிஎல் தான் சிறந்தது. உலக கோப்பையை விட மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. தற்போது ஐபிஎல்லில் விளையாடி வருகிறேன் என்பதற்காக சொல்லவில்லை. உண்மையாகவே ஐபிஎல் மிகவும் பெரிய தொடர், உலக கோப்பையை விட சிறந்த தொடர் என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஓய்வு அறிவிப்பு

ஓய்வு அறிவிப்பு

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையில் ஆடாமல் கடந்த ஆண்டே ஓய்வு பெற்று விட்டார் டி வில்லியர்ஸ். சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற அவர், உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு டி 20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார்.

Story first published: Saturday, May 4, 2019, 14:33 [IST]
Other articles published on May 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+