அவரோட சின்ன விரல்கள்ல எவ்ளோ வித்தைய வச்சுருக்காரு... உச்சி முகர்ந்த சுனில் கவாஸ்கர்
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆட்டங்களை பதிவு செய்துள்ளார் துவக்க வீரர் ரோகித் சர்மா.
இறுதிப்போட்டியிலும் 49 ரன்களை குவித்து ரிஷப் பந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்நிலையில் இந்தியாவில் ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ள சிறந்த வீரர் என்றால் அது ரோகித் சர்மாதான் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் சிறப்பு
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இந்தியா 3க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. தொடரில் துவக்கம் முதலே துவக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அணியின் வெற்றித் தருணங்களுக்கு கைகொடுத்தார்.

சிறப்பான பிட்ச் என விளக்கம்
ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்களிலும் அவர் தனது சிறப்பை வெளிப்படுத்தினார். அனைவரும் பிட்ச் குறித்து விமர்சனங்களை தொடர்ந்து வைத்த நிலையில், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பிட்ச் இருந்ததாக ரோகித் சர்மா பிட்ச் ரிப்போர்ட் கொடுத்தார்.

சிறப்பாக எதிர்கொள்ளும் ரோகித்
இந்நிலையில் இந்தியாவில் ஸ்பின் பந்துகளை எதிர்கொண்டு விளையாடுவதில் சிறப்பான வீரராக தான் ரோகித் சர்மாவை கருதுவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சிற்காக பேசிய சுனில் கவாஸ்கர் இதனை கூறியுள்ளார்.

அதிகமான திறமைகள்
மேலும் ரோகித் சர்மா தனது சிறிய விரல்களில் அதிகமான திறமைகளை வைத்துள்ளதாகவும் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். மற்றவர்கள் இணைந்து செய்ய முடியாத விஷயங்களையும் ரோகித் சர்மா சிறப்பாக செய்து வருவதாகவும் புகழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications