Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாட்டுக்காக விளையாடறதுதான் முக்கியம்... அதுமூலமா கனவு நனவாகிட்டு இருக்கு... ரோகித் உற்சாகம்

மெல்போர்ன் : சிட்னியில் தன்னுடைய குவாரன்டைனை முடித்துவிட்டு இன்று முதல் இந்திய அணியின் பயிற்சிகளில் துவக்க வீரர் ரோகித் சர்மா பங்கேற்கிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் பங்கேற்பது விருப்பமாக இருந்தாலும் பங்கேற்க முடியாவிட்டால் அதுகுறித்து கவலை கொள்ள மாட்டேன் என்று ரோகித் கூறியுள்ளார்.

ஆனால் நாட்டிற்காக விளையாடும் தனது கனவில் தான் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயிற்சிகளில் பங்கேற்பு

பயிற்சிகளில் பங்கேற்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து முடிந்துள்ள தொடர்களில் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் துணை கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்காத நிலையில், தற்போது அந்த அணிக்கு எதிரான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். இதையொட்டி தற்போது அவர் மெல்போர்னில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

இறுதி 2 போட்டிகளில் பங்கேற்பு

இறுதி 2 போட்டிகளில் பங்கேற்பு

முன்னதாக ஐபிஎல் போட்டிகளின்போது காயம் ஏற்பட்டதையடுத்து அவர் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இடம்பெற்றிருந்தார். அதிலும் தனது பிட்னசை நிரூபிக்கும்வகையில் அவர் என்சிஏவில் பயிற்சி மேற்கெண்டதால், தற்போது இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கவுள்ளார்.

ஆஸிக்கு எதிரான போட்டிகள்

ஆஸிக்கு எதிரான போட்டிகள்

இதையொட்டி சிட்னியில் குவாரன்டைனில் ஈடுபட்டிருந்த ரோகித் சர்மா இன்றுமுதல் இந்திய அணியின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் பங்கேற்பது தனது கனவு என்றும் ஆனால் அது நடைபெறவில்லை என்றாலும் தான் அதுகுறித்து கவலை கொள்ள மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நனவாகிவரும் கனவு

நனவாகிவரும் கனவு

மேலும் நாட்டிற்காக விளையாடும் தனது கனவே தனக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த கனவு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 7ம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ள இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவுள்ள நிலையில், அணி மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, December 30, 2020, 14:22 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+