Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 16வது போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பின்னால் சென்று நின்று கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்சிபி 200வது போட்டி

ஆர்சிபி 200வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி ஆர்சிபியின் 200வது ஐபிஎல் போட்டியாகும். இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆர்சிபி அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நிலைப்பெற்றுள்ளது.

ஆர்சிபி டாஸ் வெற்றி

ஆர்சிபி டாஸ் வெற்றி

இன்றைய 16வது ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்த அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று 7வது இடத்தில் உள்ளது.

ரிச்சர்ட்சன் இணைப்பு

ரிச்சர்ட்சன் இணைப்பு

இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய பிட்ச் பாஸ்ட் பௌலர்களுக்கு சாதகமாக அமையும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் அதிகமான மாற்றங்கள் இல்லாத போதிலும் ஆர்சிபியில் பட்டிதாருக்கு பதிலாக ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி பீல்டிங் தேர்வு

ஆர்சிபி பீல்டிங் தேர்வு

இதனிடையே ராஜஸ்தான் அணியில் உனத்கட்டிற்கு பதிலாக ஷ்ரேயாஸ் கோபால் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே, இன்றைய பேட்டியில் விராட் கோலியின் ஆர்சிபி அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மனன் வோரா மற்றும் ஜோஸ் பட்லர் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

நம்பாத ஆர்சிபி கேப்டன்

முன்னதாக டாசிஸ் வெற்றி கொண்ட ஆர்சிபி கேப்டன் அதை நம்பாமல் பின்னால் சென்று நின்றுக் கொண்டார். அவரால் டாஸ் வெற்றியை நம்ப முடியவில்லை. பின்னர், தன்னை உணர்ந்து மீண்டும் வந்து சாரி, நான் தான் டாஸ் வென்றேன் என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தார். இதனால் அந்த இடம் பரபரப்புக்கு உள்ளானது.

Story first published: Thursday, April 22, 2021, 20:19 [IST]
Other articles published on Apr 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+