For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final:இஷான் கிஷன் சரியான சாய்ஸ்.. எப்படி ஆடுவார்னு யாருக்கும் தெரியாது.. ரிக்கி பாண்டிங் அட்வைஸ்

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அணிகளின் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர்.

I Would go with Ishan Kishan as a Wicket Keeper in WTC Final says Australia former Captain Ricky Ponting

அங்கு விராட் கோலி, சிராஜ், அஸ்வின், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் 2வது குழுவினர் இங்கிலாந்துக்கு சென்று சேர்ந்துள்ளனர். ஐபிஎல் இறுதிப்போட்டி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பலரின் கவனமும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பக்கம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸி. அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஓவல் மைதானம், ஆஸ்திரேலியா சூழலை போலவே அமைந்திருக்கும். இதனால் ஆஸி. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக எடுபடும். ஆனால் ஆஸி. வீரர்களின் மூளைக்குள் புஜாரா இப்போதும் பாதிப்பை உண்டு செய்கிறார்.

I Would go with Ishan Kishan as a Wicket Keeper in WTC Final says Australia former Captain Ricky Ponting

ஏற்கனவே புஜாராவால் ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் பாதிப்புகளை அடைந்துள்ளது. அதனால் புஜாராவை விரைந்து வீழ்த்த வேண்டும் என்றே ஆஸி. வீரர்கள் கருதுவார்கள். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்களின் காயமும் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே ரிஷப் பண்ட் காயத்தால் ஓய்வில் இருப்பதால், கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டார். தற்போது அவரும் காயமடைந்துள்ளதால் பரத் அல்லது இஷான் கிஷனை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சூழலில் நான் இருந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இஷான் கிஷனை தேர்வு செய்வேன். ஏனென்றால் இஷான் கிஷன் அதிரடியாக ஆடக் கூடிய வீரர் என்பதோடு, அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்பது யாருக்கும் தெரியாது. அதேபோல் அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றக் கூடிய வீரராவார் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, May 29, 2023, 10:34 [IST]
Other articles published on May 29, 2023
English summary
WTC Final: Former Australian Captain Ricky Ponting said, I Would go with Ishan kishan as a wicket keeper in the Match against Australia.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+