
டி20 தொடர் வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ள டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து வரும் 23ம் தேதி ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரிலும் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

36 ரன்களில் இந்தியா வெற்றி
இதனிடையே நேற்றைய 5வது டி20 போட்டியில் 36 ரன்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களடம் பேசிய கேப்டன் விராட் கோலி டி20 தொடர் மட்டுமின்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடர் குறித்தும் பேசினார்.

துவக்க வீரர்களாக ஆட்டம்
நேற்றைய போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப்பில் 94 ரன்களை குவித்தனர். இதையடுத்தே போட்டி வெற்றியை நோக்கி நடைபோட்டது. கடந்த 2014க்கு பிறகு இந்த ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடியுள்ளது.

வெற்றி பெற்ற துவக்க இணை
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரையொட்டி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பல்வேறு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்தே விராட் கோலி -ரோகித் சர்மா இணை துவக்க வீரர்களாக களமிறங்கி தற்போது வெற்றியும் பெற்றுள்ளது.

ரோகித்துடன் விளையாட விராட் ஆசை
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். வரும் டி20 உலக கோப்பை தொடர் வரையில் ரோகித்துடன் இணைந்து துவக்க வீரராக விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இந்த இணை துவக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் அதற்காகவே விராட் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications