For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் கேப்டன் ஸ்டைலை நான் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்: கோஹ்லி

By Siva

டெல்லி: அணியை வழிநடத்தும் தனது தலைமை குணத்தை மாற்றிக் கொள்ளுமாறு யாரும் கேட்டாலும் மாற்ற மாட்டேன் என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கேப்டன் டோணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கோஹ்லியை டோணி போன்று விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருக்குமாறு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாவ் கேட்டுக் கொண்டார். இது குறித்து கோஹ்லி கூறுகையில்,

மாட்டேன்

மாட்டேன்

நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன். யாரும் என்னை மாறச் சொல்வதாலும் என் தலைமை குணங்களை மாற்றிக்கொள்ள மாட்டேன். சில சின்ன விஷயங்களை நான் மேம்படுத்த வேண்டும். ஒரு கேப்டனாக நான் செயல்படும் விதத்தை ஒருபோதும் யாருக்காகவும் மாற்ற மாட்டேன்.

டோணி

டோணி

நான் கேப்டனாக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளேன். அப்படி இருக்கையில் என்னை ஏன் பிறருடன்(டோணியுடன்) ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நான் வித்தியாசமானவன். என் குணம் வித்தியாசமானது.

உணர்ச்சி

உணர்ச்சி

மைதானத்தில் இருக்கையில் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் இருப்பதே நல்ல கேப்டனுக்கு அழகு. அந்த வகையில் உணர்ச்சியை முகத்தில் காட்டாமல் இருக்க நான் முயற்சி செய்ய வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்

உலகில் டெஸ்ட் கிரிக்கெட் பாதுகாப்பான கரங்களில் உள்ளது. போட்டியிட்டு வெற்றி பெற விரும்பும்வரை டெஸ்ட் கிரிக்கெட் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். 4 மணிநேரத்தில் 80 ரன்கள் எடுக்கலாம், ஆனால் அதனால் என்ன பயன்? வெற்றியை எதிர்பார்த்து விளையாட வேண்டும் என நம்புகிறவன் நான் என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, June 4, 2015, 14:03 [IST]
Other articles published on Jun 4, 2015
English summary
India's Test cricket team captain Virat Kohli says he would not change his leadership style even if anyone asks him to.
 Former Australia captain Steve Waugh has reportedly urged the 26-year-old to have a thick skin, much like Kohli's predecessor Mahendra Singh Dhoni, who quit Tests after the third match against Australia in December 2014.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+