Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், ரோகித், கோலி, தோனி, டிவில்லியர்ஸ் என 11 பேர் இருக்கும் டீம்…!! எப்படி இருக்கும்..?

Recommended Video

Dream Team - சச்சின், தோனி, அக்ரம், டிவில்லியர்ஸ் என 11 பேர் இருக்கும் டீம் எப்படி இருக்கும் ?

லண்டன்: உலக கோப்பை தொடர் நடந்து வரும் வேளையில் தமது கனவு அணியை செலக்ட் செய்துள்ள முன்னாள் வீரர் இயான் பிஷப், அதில் 4 இந்திய வீரர்களுக்கு இடம் கொடுத்து அசத்தி உள்ளார்.

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நடை போட ஆரம்பித்திருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணியும் கலக்கி வருகிறது.

Ian bishop picks 4 indian cricketers in his all time team

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரும் உலக கோப்பை தொடரின் வர்ணனையாளர்களில் ஒருவருமான இயான் பிஷப், சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்து, அந்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். அணியின் தொடக்க வீரர்களாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரரான சச்சினுக்கு ஓபனிங் பார்ட்னராக ரோகித்தை டிக் அடித்துள்ளார் இயான் பிஷப். 3ம் வரிசையில் விவியன் ரிச்சர்ட்ஸையும் நான்காம் வரிசையில் கோலியையும் சேர்த்து அசத்தி இருக்கிறார்.

டி வில்லியர்சை 5ம் வரிசையிலும் ஆல்ரவுண்டராக தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் குளூசனரையும் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக நம்ம தல தோனி, பவுலர்களாக வாசிம் அக்ரம், மெக்ராத் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோயல் கார்னர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர் வகையில் சாக்லைன் முஷ்டாக்கை தேர்வு செய்திருக்கிறார்.

இயான் பிஷப்பின் சிறந்த ஒருநாள் அணி பட்டியல்: சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விவியன் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி, டி வில்லியர்ஸ், லான்ஸ் குளூசனர்,எம்எஸ் தோனி, வாசிம் அக்ரம், சாக்லைன் முஷ்டாக், ஜோயல் கார்னர், கிளென் மெக்ராத்.

Story first published: Monday, June 10, 2019, 17:27 [IST]
Other articles published on Jun 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+