For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புறக்கணிக்கப்பட்ட ரோகித் சர்மா.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா கொடுத்த ட்விஸ்ட்.. கொந்தளித்த ரசிகர்கள்!

மும்பை: உலகக்கோப்பை தொடரில் ஆடிய 10 அணிகளில் இருந்தும் உருவாக்கப்பட்ட 12 வீரர்கள் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. மொத்தமாக நடைபெற்ற 45 லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து நவ.15ஆம் தேதி நடக்கவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளும், நவ.16ல் நடைபெற்ற 2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.

ICC 50 Over World Cup 2023: Cricket Australia didnt select Rohit Sharma in the team of the World Cup 2023

இந்த இரு அரையிறுதி போட்டிகளிலும் வெற்றிபெறும் அணிகள் நவ.19ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் சிறந்த வீரர்களை கொண்ட 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியில் இருந்து கோலி, ஜடேஜா, முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகிய 4 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து டி காக், மார்க்ரம் மற்றும் யான்சன் ஆகிய 3 வீரர்களும், ஆஸ்திரேலிய அணியில் இருந்து வார்னர், மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகிய 3 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்பின் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் இலங்கை அணியின் மதுஷங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அணிக்கு இந்திய அணியின் விராட் கோலி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டு 4வது இடத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இந்திய அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் விவாதமாக எழுந்துள்ளது.

ஏனென்றால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 503 ரன்களை விளாசியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 9 போட்டிகளில் விளையாடி 499 ரன்களை விளாசியுள்ளார். பெரியளவில் வித்தியாசமில்லை என்றாலும், ரோகித் சர்மா கேப்டன்சி பணியையும் சேர்த்து மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 13, 2023, 14:08 [IST]
Other articles published on Nov 13, 2023
English summary
ICC 50 Over World Cup 2023: Cricket Australia announced the team of world cup 2023. It has 4 Indians, 3 Australia and South Africa players.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+