For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதை மட்டும் செய்யுங்கள்.. பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு உறுதி.. வாசிம் அக்ரம் ஐடியா!

மும்பை: இங்கிலாந்து அணி வீரர்களை ஓய்வறையிலேயே பூட்டி வைத்து டைம் அவுட் முறையில் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்று ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் 99 சதவிகிதம் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், கற்பனை செய்ய முடியாத வெற்றியை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

icc 50 over world cup: Lock the England team in the dressing room and get them timed out is the only way to play in Semi Finals says Wasim Akram

உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதிபெற வேண்டுமென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். அதில் பாகிஸ்தான் 300 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணியை 13 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும், அதேபோல் 400 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 112 ரன்களுக்கு கட்டுப்படுத்த வேண்டும்.

ஒருவேளை 450 ரன்கள் சேர்த்தால் 162 ரன்கள் சேர்க்க வேண்டும், 500 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 211 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற 99 சதவிகிதம் வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணி முதல் பேட்டிங் செய்து நல்ல இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும். அதன்பின் இங்கிலாந்து அணியை ஓய்வறையில் வைத்து பூட்டி வைத்து, டைம் அவுட் செய்ய வேண்டும் என்று கிண்டல் செய்துள்ளார்.

அண்மையில் இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் வங்கதேச அணியால் அவுட் செய்யப்பட்டார். அதனை பின்பற்றி இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்று வாசிம் அக்ரம் கிண்டலாக கூறியுள்ளார்.

Story first published: Friday, November 10, 2023, 9:10 [IST]
Other articles published on Nov 10, 2023
English summary
Pakistan Former Cricketer Wasim Akram said, Lock the England team in the dressing room and get them timed out is the only way to play in Semi Finals in the icc 50 over world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+