Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக 50 சிக்ஸ்.. உலகக்கோப்பை வரலாற்றை மாற்றிய ரோகித் சர்மா.. ஹிட்மேனின் மிரட்டல் சாதனை!

மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 50 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை ஆடுகளம் "ஸ்லோ பிட்ச்" என்று கணிக்கப்பட்டுள்ளதால், முதல் பேட்டிங்கை இந்திய அணி தேர்வு செய்தது.

ICC 50 Over World Cup: Rohit Sharma becomes first player to score 50 sixes in world Cup History during IND vs NZ Semi Final Clash

இந்த போட்டிக்காக இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நியூசிலாந்து அணி தரப்பில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான டிரென்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி ரோகித் சர்மா அதிரடியாக தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் போல்ட் வீசிய 3வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்சரை விளாச, பின்னர் டிம் சவுதி வீசிய 4வது ஓவரில் மற்றொரு சிக்சர்களை விளாசி அசத்தினார். இதனைத் தொடர்ந்து மீண்டும் போல்ட் பந்துவீச்சில் இன்னொரு சிக்சரை விளாசி அசத்தினார். இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இதுவரை 27 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 50 சிக்சர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் 49 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்க் 2வது இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் 43 சிக்சர்களுடன் கிளென் மேக்ஸ்வெல் 3வது இடத்திலும், 37 சிக்சர்களுடன் டி வில்லியர்ஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் 4வது இடத்திலும் உள்ளனர். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார். தற்போது உலகக்கோப்பை வரலாற்றிலும் கெய்லின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 26 சிக்சர்களை விளாசியதே சாதனையாக இருந்தது. தற்போது ரோகித் சர்மா 27 சிக்சர்களை விளாசி, கிறிஸ் கெய்லின் மற்றொரு சாதனையையும் முறியடித்துள்ளார்.

Story first published: Wednesday, November 15, 2023, 15:04 [IST]
Other articles published on Nov 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+