Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்னல் கொடுத்துட்டாங்க.. சச்சின், தோனி, கோலி வரிசையில் இணைந்த இளம் வீரர்.. இனி அவர் வழிதான் போல!

மும்பை: ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இதுவரை முதலிடம் பிடித்துள்ள இந்திய வீரர்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதில் இந்திய அணியின் அனைத்து வீரர்களின் செயல்பாடுகளுமே காரணமாக அமைந்துள்ளது. தொடக்க வீரர் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்ட அனைவருமே பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர்.

icc 50 over world cup: Shubman Gill becomes the 4th Indian batter to Number 1 in ICC ODI Rankings

அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட 5 வீரர்களும் எதிரணிகளுக்கு அச்சத்தை விதைத்துவிட்டனர். ஏதோ ஒரு வீரரால் இந்திய அணி வெற்றியை பெறாமல், அனைத்து வீரர்களின் உதவியுடனும் இந்திய அணி வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் ஐசிசி ஒருநாள் தரவரிசையிலும் பிரதிபலித்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 219 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் 830 புள்ளிகள் பெற்று சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

icc 50 over world cup: Shubman Gill becomes the 4th Indian batter to Number 1 in ICC ODI Rankings

இதன் மூலம் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதுவரை இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் முதலிடத்தில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பின் சுப்மன் கில் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

அதேபோல் இந்த வரிசையில் இன்னொரு மறைமுக விஷயமும் அடங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் முகமாக சச்சின் டெண்டுல்கருக்கு பின் தோனியும், தோனிக்கு பின் விராட் கோலி இருந்துள்ளனர். தற்போது விராட் கோலிக்கு பின் சுப்மன் கில் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக கொண்டாடப்பட்டு வருகிறார். அதற்கேற்ப சுப்மன் கில் முதலிடம் பிடித்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Story first published: Wednesday, November 8, 2023, 15:48 [IST]
Other articles published on Nov 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+