Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2024ஆம் ஆண்டின் ஒருநாள்,டி20,டெஸ்ட் சிறந்த வீரர், வீராங்கனை யார்? பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள்

துபாய் : 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு ஒரு மிக முக்கிய ஆண்டாக அமைந்தது. டி20 உலக கோப்பை, டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய உச்சம், பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு என பல மறக்க முடியாத நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஐசிசி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கிய வீராங்கனைகளை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் நிபுணர்கள் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் வாக்கு மூலம் தேர்வு செய்வார்கள்.

Year Ender 2024 ICC Awards 2024 ICC Player of the year jasprit bumrah

அந்த வகையில் தற்போது இந்த விருதுகளுக்கு யார் போட்டியிடுகிறார்கள் என்பதை ஐசிசி அறிவித்திருக்கிறது. அதன்படி ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கும், 2024 ஆம் ஆண்டு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கும் இந்திய அணியின் பும்ரா, ஆஸ்திரேலிய வீரர் ஹெட்,இங்கிலாந்து வீரர்கள் ஹாரி புருக் போட்டி போடுகிறார்கள்.

இதில் பும்ரா நடப்பாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 71 விக்கெட்,டி20 கிரிக்கெட்டில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். மொத்தமாக 1500 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் ஒவ்வொரு விருதுக்கும், எந்த வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஐசிசி ஆண்கள் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை; ஹாரி புரூக் (இங்கிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து)

ஐசிசி பெண்கள் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் கோப்பை; சாமரி அதபத்து (இலங்கை), அமெலியா கெர் (நியூசிலாந்து), அன்னாபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), லாரா வால்வார்ட் (தென் அமெரிக்கா)

ஐசிசி ஆண்கள் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்; ஹாரி புரூக் (இங்கிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ஜோ ரூட் (இங்கிலாந்து)

ஐசிசி ஆண்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்; ஹசரங்கா (இலங்கை), குசல் மெண்டிஸ் (இலங்கை)), அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆப்கான்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (வெஸ்ட் இண்டிஸ்)

ஐசிசி பெண்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்; சாமரி அதபத்து (SL), ஸ்மிருதி மந்தனா (IND), அன்னபெல் சதர்லேண்ட் (AUS), லாரா வோல்வார்ட் (SA)

ICC ஆண்கள் T20I ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்; பாபர் அசாம் (PAK), டிராவிஸ் ஹெட் (AUS), சிக்கந்தர் ராசா (ZIM), அர்ஷ்தீப் சிங் (IND)

ICC மகளிர் T20I ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்; சாமரி அதபத்து (SL), அமெலியா கெர் (NZ), ஓர்லா பிரெண்டர்காஸ்ட் (IRE), லாரா வோல்வார்ட் (SA)

ICC வளர்ந்து வரும் ஆண்கள் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்; கஸ் அட்கின்சன் (ENG), சைம் அயூப் (PAK), ஷமர் ஜோசப் (WI), கமிந்து மெண்டிஸ் (SL)

ICC வளர்ந்து வரும் பெண்கள் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்; அன்னெரி டெர்க்சன் (SA), சாஸ்கியா ஹார்லி (SCO), ஷ்ரேயங்கா பாட்டீல் (IND), ஃப்ரேயா சார்ஜென்ட் (IRE)

Story first published: Tuesday, December 31, 2024, 7:45 [IST]
Other articles published on Dec 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+