Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லிஸ்டில் தமிழக வீரர் பெயர்.. கோலி டாப். 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? கசிந்த பட்டியல்

துபாய் : கடந்த பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரரை அறிவிக்க உள்ளது ஐசிசி.

ஒரே ஒரு வீரரை மட்டுமே ஐசிசி தேர்வு செய்ய உள்ளது. அதற்கான இறுதிப் பட்டியலில் இரண்டு இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

ஒருவர் விராட் கோலி, மற்றொருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின்.

ஐசிசி தேர்வு

ஐசிசி தேர்வு

2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரரை ஐசிசி தேர்வு செய்ய உள்ளது. அதற்கான இறுதிப் பட்டியலை தயார் செய்து அதில் இருந்து ஒருவரை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறந்த வீரர்கள்

சிறந்த வீரர்கள்

இந்தப் பட்டியல் குறித்த விவரம் ஐசிசி-யால் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எனினும் சிலர் அந்தப் பட்டியல் இதுதான் என ஏழு வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளனர். அதில் இரண்டு இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

மூன்று பட்டியல்கள்

மூன்று பட்டியல்கள்

அந்த ஏழு வீரர்களில் இருந்து தான் ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார். இது தவிர சிறந்த ஒருநாள் வீரர், டெஸ்ட் வீரர், டி20 வீரரும் தேர்வு செய்யப்பட உள்ளார். அதில் ஒருநாள் பட்டியலில் மூன்று இந்திய வீரர்களும், டி20 பட்டியலில் இரண்டு இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் பட்டியலில் ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

ஐசிசி சிறந்த வீரர் பட்டியல்

ஐசிசி சிறந்த வீரர் பட்டியல்

ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஏழு வீரர்கள் - விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஏபி டிவில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ரவிச்சந்திரன் அஸ்வின், குமார் சங்ககாரா. இதில் விராட் கோலிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர்

ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர்

ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர்களுக்கான இறுதிப் பட்டியல் - விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜேம்ஸ் ஆண்டர்சன், ரங்கனா ஹெராத், யாசிர் ஷா. இதில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஆண்டர்சன், ரங்கனா ஹெராத் இடையே கடும் போட்டி இருக்கும்.

ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர்

ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர்

ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர்களுக்கான ஏழு வீரர்கள் பட்டியல் - விராட் கோலி, லசித் மலிங்கா, மிட்செல் ஸ்டார்க், ஏபி டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா, தோனி, குமார் சங்ககாரா. இந்தப் பட்டியலில் அனைவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி சிறந்த டி20 வீரர்

ஐசிசி சிறந்த டி20 வீரர்

ஐசிசி சிறந்த சர்வதேச டி20 வீரர்களுக்கான இறுதிப் பட்டியல் - ரஷித் கான், விராட் கோலி, ரோஹித் சர்மா, இம்ரான் தாஹிர், ஆரோன் பின்ச், லசித் மலிங்கா, கிறிஸ் கெயில். இதில் ரஷித் கானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அவருக்கு அடுத்ததாக ரோஹித் சர்மா, கோலிக்கு வாய்ப்பு உள்ளது.

விராட் கோலி

விராட் கோலி

இந்த நான்கு பட்டியல்களில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர் விருதுகளை விராட் கோலி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவரே வெல்வார் என கருதப்படுகிறது.

Story first published: Tuesday, November 24, 2020, 16:10 [IST]
Other articles published on Nov 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+