இந்தியாவுக்கு துரோகம் செய்த ஐசிசி.. ஆடுகளத்தில் வைத்த ட்விஸ்ட்.. இனி அரையிறுதி கஷ்டம் தான்
அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து மோதவுள்ள ஆட்டத்தில் ஐசிசி பெரிய ட்விஸ்ட் வைத்துள்ளது.
அடிலெய்ட் மைதானத்தில், இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுகிறது. நடப்பு தொடரில் இந்திய அணி ஏற்கனவே அடிலெய்டில் வங்கதேசத்துடன் ஒரு போட்டியில் விளையாடி விட்டது.
ஆனால், இங்கிலாந்து அணி நடப்பு தொடரில் முதல் முறையாக களமிறங்குகிறது. இந்த நிலையில், தான் ஐசிசி முடிவு ரோகித் சர்மாவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஆடுகளம்
பொதுவாக, தொடர்களின் அரையிறுதி ஆட்டத்தில் எல்லாம் பெரும்பாலும் புதிய ஆடுகளத்தை ஐசிசி அமைக்கும். ஏன் என்றால், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் மீண்டும் போட்டியை நடத்தினால் பந்து பேட்டிற்கு சரி வர வராது. இதனால் இரு அணி வீரர்களுக்குமே போட்டி கடும் நெருக்கடியை தரும்.

பழைய ஆடுகளம்
மேலும், பழைய ஆடுகளத்தில் மீண்டும் போட்டியை நடத்தினால் டாஸ் பெரும் முக்கியத்துவத்தை தரும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை பெற்றால், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு கடினமாக இருக்கும். தற்போது, இங்கிலாந்து, இந்திய அணிகள் மோதும் ஆட்டத்திற்கு ஏற்கனவே பயன்படுத்த ஆடுகளத்தை தான் ஐசிசி அமைத்துள்ளது.

டாஸ் முக்கியத்துவம்
இதன் மூலம் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் பெரும் முக்கியத்துவத்தை கொடுக்கும். அடிலெய்ட் மைதானத்தை பொறுத்தவரையில் இங்கிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிக சாதகங்களை உடைய மைதானமாக இருக்கும். ஏனெனில் இந்திய மைதானங்களுக்கு ஒத்துப்போகும் வகையில் செயல்படக் கூடிய மைதானம் என்றால் அது அடிலெய்ட் தான். இதனால் தான் 2020 ஆம் ஆண்டை தவிர்த்து அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட்களிலும் ஆஸ்திரேலியாவை இந்தியா நடுங்க வைத்துள்ளது.

யாருக்கு சாதகம்?
தற்போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தை கொடுத்தால், டாஸ் என்ற காரணி, இந்தயாவுக்கு இருக்கும் சாதகத்தை அழித்துவிடும். அடிலெய்ட் மைதானம் சுழற்பந்தவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், எந்த அணி சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஏற்கனவே பயன்படுத்த மைதானத்தில் போட்டி நடப்பதால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படவும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications