Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC Rankings -டெஸ்டில் இந்தியா முதலிடம் பிடிக்க வாய்ப்பு.. இதை செய்தால் போதும்-மற்ற தரவரிசை பட்டியல்

மும்பை : ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. எனினும் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் டாப் ஐந்து இடங்களை பிடித்திருக்கும் அணியை குறித்து தற்போது பார்க்கலாம்.

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 121 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய அணி 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து அணி 115 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும் தென்னாப்பிரிக்க அணி 16.1 நான்காம் இடத்திலும் நியூசிலாந்து அணி 95 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

ICC Latest Rankings - India might reach top 1 ranking in test and other full details

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் இந்திய அணி மூன்றுக்கும் பூஜ்ஜியம் 4க்கு ஒன்று ஆகிய கணக்கில் வெற்றி பெற்றால் இந்திய அணி தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் சென்று விடும். அதேசமயம் இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் அல்லது மூன்றுக்கு இரண்டு ஆகிய கணக்கில் வெற்றி பெற்றால் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து இரண்டாவது இடம் சென்று விடும்.

இதேபோன்று ஒரு நாள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் 117 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 110 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 109 புள்ளிகள் உடன் நான்காம் இடத்திலும் நியூசிலாந்தின் 102 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 265 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்திலும், 256 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 254 புள்ளிகள் நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும், 251 புள்ளிகளுடன் பாகிஸ்தான் நான்காவது இடத்திலும், 250 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது. டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்மித் முறையே மூன்று இடங்களில் உள்ளனர்.

ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் கில்லும், கோலி மூன்றாவது இடத்திலும், ரோகித் சர்மா நான்காவது இடத்திலும் உள்ளனர். டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதலிடத்திலும் பேட் கம்மின்ஸ் இரண்டாவது இடத்திலும், ரபாடா மூன்றாவது இடத்திலும், பும்ரா நான்காவது இடத்திலும், ஜடேஜா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஒரு நாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முகமது சிராஜ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Story first published: Tuesday, January 23, 2024, 16:00 [IST]
Other articles published on Jan 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+