ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை - பும்ரா முதலிடம்.. முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள்

துபாய்: ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

Recommended Video

Pakistan-ஐ முந்திய Indian Team! ICC Ranking-ல் உச்சம் | Aanee's Appeal | *Cricket

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பும்ரா 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேதப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா படைத்தார்.

பந்துவீச்சில் பும்ரா செய்த டிரிக்... இங்கிலாந்து விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? பும்ரா விளக்கம்பந்துவீச்சில் பும்ரா செய்த டிரிக்... இங்கிலாந்து விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? பும்ரா விளக்கம்

 பும்ரா முதலிடம்

பும்ரா முதலிடம்

இதன் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி ஒருநாள் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்டை பின்னுக்கு தள்ளி பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார் . பும்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது முதல் இடத்தை ட்ரெண்ட் போல்டுக்கு தாரை வார்த்தார்.

பும்ராவின் சாதனை

பும்ராவின் சாதனை

இதன் மூலம் ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசை பட்டியலில் அதிக நாட்கள் முதலிடம் பிடித்த இந்திய பந்துவீச்சாளர் மற்றும் கபில்தேவுக்கு பிறகு ஐசிசி தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமைகளை பும்ரா பெற்றுள்ளார். தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட்களில் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்கள் பிடித்துள்ள மூன்றாவது பந்துவீச்சாளர் பும்ரா ஆவார்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி தற்போது மூன்று இடங்கள் முன்னேறி 23 வது இடத்தை பிடித்துள்ளார்.ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேனுக்காண தரவரிசை பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிராக 76 ரன்கள் அடித்த ரோகித் சர்மா நான்காவது இடத்தில் நீடித்தாலும், விராட் கோலிக்கும் அவருக்கும் இடையிலான ரேட்டிங் தற்போது குறைந்துள்ளது. இதே போன்ற நட்சத்திர வீரர் தவான், இங்கிலாந்துக்கு எதிராக 31 ரன்கள் அடித்ததன் மூலம் ஒரு இடம் முன்னேறி தரவரிசை பட்டியலில் 12-வது இடத்தை பிடித்துள்ளார்.

சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

இதேபோன்று ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் சிங்கப்பாய்ச்சலை பாய்ந்து உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது t20 போட்டியில் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்த சூரியகுமார் யாதவ், 44 இடங்கள் முன்னேறி தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார் . இதேபோன்று டி20 பந்து வீச்சாளருக்கான பட்டியலில் புவனேஸ்வர் குமார் 7 இடங்கள் முன்னேறி 14வது இடத்தில் இருந்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று ஹர்சல் பட்டேல் 10 இடங்கள் முன்னேறி 23வது இடத்தை பிடித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC Latest rankings Jasprit Bumrah is on top position and Suryakumar yadav in to 5th positionஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை - பும்ரா முதலிடம்.. முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள்
Story first published: Wednesday, July 13, 2022, 16:24 [IST]
Other articles published on Jul 13, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X