2024ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டி20 அணி.. கோலிக்கு இடமில்லை.. 4 இந்திய வீரர்கள் தேர்வு
மும்பை : 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த t20 அணியை ஐசிசி அறிவித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற்றது. இதில் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சிறந்து விளையாடிய வீரர்களை ஐசிசி தேர்வு செய்து ஒரு அணியாக அறிவித்திருக்கிறது. இதில் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதில் தொடக்க வீரராகவும் ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு 11 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 378 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 121 ரன்கள் அடங்கும். ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 160 என்ற அளவில் இருந்தது. ரோகித் சர்மா கடந்த டி20 உலக கோப்பையில் 3 அரை சதமும் அடித்திருந்தார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு ஜோடியாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
15 போட்டியில் விளையாடிய அவர் 539 ரன்கள் அடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் விராட் கோலி இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு பதிலாக இங்கிலாந்து வீரர் பில் சால்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் 17 போட்டியில் விளையாடி 467 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதமும் அடங்கும்.
நான்காவது வீரராக பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதுவரை 24 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 738 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு அரை சதம் அடங்கும். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் தேர்வாகியிருக்கிறார். 21 போட்டியில் விளையாடியுள்ள நிக்கோலஸ் பூரான் 464 ரன்கள் சேர்த்திருக்கிறார்.
இதில் இரண்டு அரை சதமும் அடங்கும்.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா சேர்க்கப்பட்டிருக்கிறார். 24 போட்டியில் விளையாடியுள்ள சிக்கந்தர் ராசா 573 ரன்கள் சேர்த்திருக்கிறார். பந்துவீச்சில் 24 விக்கெட்டுகளையும் சிக்கந்தர் ராசா வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேர்வாகியிருக்கிறார்.
17 போட்டியில் 352 ரன்கள் அடித்துள்ள ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். 14 போட்டியில் விளையாடியுள்ள அவர் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை இலங்கை அணியின் ஹசரங்கா இடம் பிடித்திருக்கிறார். ஹசரங்கா 20 போட்டியில் விளையாடி பேட்டிங்கில் 179 ரன்களும், பந்து வீச்சில் 38 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருக்கிறார்.
இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தேர்வாகி இருக்கிறார். எட்டு போட்டியில் விளையாடியுள்ள பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்தப் பட்டியலில் 11வது இடத்தில் மற்றொரு இந்திய வீரரான ஆர்ஸ்தீப் சிங் இடம் பிடித்திருக்கிறார். 18 போட்டிகளில் விளையாடிய ஆர்ஸ்தீப் சிங் மொத்தமாக 36 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் சிறந்த பந்துவீச்சு செயல்பாடாக 9 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த டி20 உலக கோப்பையில் மட்டும் ஆர்ஸ்தீப் சிங் 17 விக்கெட் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications