மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஜூன் இரண்டாம் தேதி தொடங்க உள்ள இந்த போட்டிகளில் பல சாதனைகள் உடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 கிரிக்கெட் என்றாலே சிக்ஸர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். சிக்ஸர்கள் அடிக்கும் வீரர்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்த நிலையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

இதில் முதலிடத்தில் இருக்கும் வீரரை ஏணி வைத்தால் கூட எட்ட முடியாத இடத்தில் இருக்கிறார். அது யார் என்று தற்போது பார்க்கலாம். டி 20 உலக கோப்பை வரலாற்றில் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கெயில் 63 சிக்சர்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் ரோஹித் சர்மா 39 போட்டிகளில் விளையாடி 35 சிக்சர்கள் அடித்து இருக்கிறார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஜாஸ் பட்லர் 27 போட்டியில் விளையாடி 33 சிக்சர்கள் அடித்திருக்கிறார். நான்காம் இடத்தில் இந்திய அணியின் யுவராஜ் சிங் 31 போட்டியில் விளையாடி 33 சிக்சர்கள் அடித்து இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக வாட்சன் 24 போட்டிகளில் விளையாடி 31 சிக்ஸர்களையும், டேவிட் வார்னர் 34 போட்டிகளில் விளையாடி 31 சிக்சர்களையும் அடித்திருக்கிறார்.
டிவில்லியர்ஸ் 30 போட்டிகளில் விளையாடி 30 சிக்ஸர்களும், இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி 27 போட்டியில் விளையாடி 28 சிக்ஸர்களையும் அடித்திருக்கிறார். இதில் 2024 டி20 உலககோப்பை தொடரில் ரோஹித் சர்மா, பட்லர், டேவிட் வார்னர்,விராட் கோலி, தான் முதல் பத்து இடத்தில் இருக்கிறார்கள்.இந்த தொடரில் அதிகபட்சமாக இந்த வீரர்கள் 20 சிக்சர்களை அடித்தால் கூட கெயிலின் ரெக்கார்டை உடைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.