For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவமானம் படப்போகும் பாகிஸ்தான்.. உங்க புகாரால் ஐசிசியால் ஒன்னுமே செய்ய முடியாது.. காரணமே இது தான்

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டம் பல சர்ச்சைகளுக்கு வித்திட்டு இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் வீரர்கள் மீது மத ரீதியிலான வாசகங்கள் எழுப்பப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது.

இந்த நிலையில் இது குறித்து ஐசிசி யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சார்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இந்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐசிசி யின் மூத்த நிர்வாகி ஒருவர் பாகிஸ்தான் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் ஐசிசி யால் எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

ICC Might not take any action regarding pakistan complaint on jai shri ram slogan

ஐசிசி யின் விதிப்படி ஏதேனும் ஒரு ரசிகர் வீரர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும் தவிர ஒட்டுமொத்த மக்களும் அவ்வாறு செய்தால் நிச்சயம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஐசிசியின் மூத்த நிர்வாகி கூறியிருக்கிறார். மேலும் குறிப்பிட்ட நபர் ஒரு தவறு செய்தால் வீடியோ ஆதாரங்களை வைத்து போலீஸ் இடம் புகார் அளிக்கலாம்.

ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அவ்வாறு செய்யும் போது எந்த நடவடிக்கையும் எடுக்க ஐசிசியால் இயலாது என்றும் அந்த மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார். இதேபோன்று பார்வையாளர்கள் ஏதேனும் தாக்குதல் நடத்தினால் நிச்சயம் அது மிகப்பெரிய பிரச்சினை ஆகும். ஆனால் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் வெறும் முழக்கங்கள் தான் எழுப்பப்பட்டதே தவிர வேறு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்று ஐசிசியின் மூத்த நிர்வாகி குறிப்பிட்டு இருக்கிறார்.

ஐசிசி விதிப்படி மத ரீதியான இனம் ரீதியிலான ஏதேனும் வாசகங்கள் அடங்கிய பலகைகள் மைதானத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டால் அதனை வெளியேற்றுதான் அதிகாரம் இருப்பதாகவும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அவ்வாறு செய்யும்போது ஐசிசி யால் எதுவுமே செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் ஏன் மைதானத்தில் தில் தில் பாகிஸ்தான் என்ற பாடல் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என கேள்வி கேட்டதற்கு பி சி சி ஐ அதிகாரி தற்போது ஒரு பதில் அளித்திருக்கிறார்.

அதில் தில் தில் பாகிஸ்தான் பாடலை ஒளிபரப்ப எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்த பாடலை போடுவதற்கு ஏற்ற சூழல் ஆட்டத்தில் எங்கு வந்தது என்று கேள்வி கேட்டிருக்கிறார்.இந்த விவகாரங்களில் ஐசிசி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் பட்சத்தில் நாங்கள் அங்கு விளையாட மாட்டோம் என்று போர்க்கொடி தூக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Wednesday, October 18, 2023, 19:54 [IST]
Other articles published on Oct 18, 2023
English summary
ICC Might not take any action regarding pakistan complaint on jai shri ram slogan அவமானம் படப்போகும் பாகிஸ்தான்.. உங்க புகாரால் ஐசிசியால் ஒன்னுமே செய்ய முடியாது.. காரணமே இது தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+