For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC Rankings: ரோஹித்தை வீழ்த்திய கோலி.. 4 வருஷமா இதுக்காகத்தான் வெயிட்டிங்.. மீண்டும் நம்பர் 1 இடம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட புதிய ஒருநாள் போட்டித் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி மீண்டும் அரியணை ஏறியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், சக வீரரான ரோஹித் சர்மா சறுக்கலைச் சந்தித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த தரவரிசைப் பட்டியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ICC ODI Ranking Virat Kohli Reclaims ICC ODI No 1 Ranking After 4 Years Dethrones Rohit Sharma

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு (ஜூலை 2021-க்குப் பிறகு) விராட் கோலி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். வதோதராவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 91 பந்துகளில் 93 ரன்கள் குவித்து, 300 ரன் இலக்கை எளிதாக எட்ட உதவியதே இந்த முன்னேற்றத்திற்குக் காரணமாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்தே கோலி பயங்கரமான ஃபார்மில் உள்ளார். அவரது கடைசி 5 இன்னிங்ஸ் ஸ்கோர்கள் இதோ: 74*, 135, 102, 65*, மற்றும் 93. இந்தத் தொடர் அதிரடியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

விராட் கோலி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது இது 11-வது முறையாகும். இதுவரை அவர் 825 நாட்கள் நம்பர் 1 இடத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், இவ்வளவு நாட்களாக முதலிடத்தில் கெத்து காட்டி வந்த ரோஹித் சர்மா, தற்போது 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல், முதல் போட்டியில் 84 ரன்கள் விளாசியதன் மூலம், தனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த ரேட்டிங்கை பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருக்கும் விராட் கோலிக்கும் வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் உள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், 5 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்துள்ளார். வங்கதேசத்தின் மெஹிதி ஹசனுடன் அவர் இந்த இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். நியூசிலாந்து பவுலர் கைல் ஜேமிசன், இந்தியாவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 27 இடங்கள் முன்னேறி 69-வது இடத்தைப் பிடித்துள்ளார். அர்ஷ்தீப் சிங்கும் இதே இடத்தில் உள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கலக்கிய டிராவிஸ் ஹெட் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரசா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். டி20 பந்துவீச்சில் வனிந்து ஹசரங்கா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Story first published: Wednesday, January 14, 2026, 14:36 [IST]
Other articles published on Jan 14, 2026
English summary
ICC ODI Ranking: Virat Kohli Reclaims ICC ODI No. 1 Ranking After 4 Years, Dethrones Rohit Sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+