For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC தரவரிசை பட்டியல்- கோலி, ரோகித்தை முந்திய அயர்லாந்து வீரர்.. ஒருநாள் போட்டியில் நடந்த அதிரடி

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது எந்த ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவில்லை. இரண்டு மாதமாக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்ற நிலையில், தற்போது அயர்லாந்தும் வங்கதேசமும் ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.

ICC odi rankings - Ireland Player Harry tector goes past virat kohli and rohit sharma

இதன் காரணமாக ஐசிசி தர வரிசையில் இந்திய வீரர்கள் சரிவை சந்தித்துள்ளனர்.வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற மூன்று ஒரு நாள் போட்டியில் அயர்லாந்து வீரர் ஹாரி டேக்டார் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். எனினும் இன்று ஒருநாள் தொடரில் வங்கதேச அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஹாரி டேக்டர் 21, 140, 45 என மொத்தமாக 206 ரன்களை இந்த தொடரில் குவித்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 72 புள்ளிகளை பெற்று தற்போது 722 புள்ளிகள் உடன் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறார்.இதன் காரணமாக விராட் கோலி, ரோகித் சர்மா, குயிண்டன் டி காக் ஆகியோரை அயர்லாந்து வீரர் ஹாரி டேக்டர் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

ICC odi rankings - Ireland Player Harry tector goes past virat kohli and rohit sharma

இந்த பட்டியலில் பாபர் அசாம் தொடர்ந்து 886 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். 777 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா வீரர் வேண்டர் டூஷன் இரண்டாம் இடத்திலும், பக்கர் ஜமான் மூன்றாவது இடத்திலும், இமாம் உல் ஹக் நான்காவது இடத்திலும், சுப்மன் கில் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இதேபோன்று முகமது சிராஜ் தனது முதல் இடத்தை இழந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

Story first published: Thursday, May 18, 2023, 16:54 [IST]
Other articles published on May 18, 2023
English summary
ICC odi rankings - Ireland Player Harry tector goes past virat kohli and rohit sharma ICC தரவரிசை பட்டியல்- கோலி, ரோகித்தை முந்திய அயர்லாந்து வீரர்.. ஒருநாள் போட்டியில் நடந்த அதிரடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+