Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலிடத்தை விட்டுத் தர மாட்டோம்.. கெட்டியாக பிடித்துக் கொண்ட இந்திய வீரர்கள்

மும்பை : ஐசிசியின் ஒருநாள் போட்டிகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பேட்டிங் வரிசையில் முதல் இரண்டு இடங்களில் கேப்டன் விராட் கோலி மற்றும் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

பௌலர்கள் வரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா இரண்டாவது இடத்தில் நிலைப்பெற்றுள்ளார்.

முதலிரண்டு இடங்களில் விராட், ரோகித்

முதலிரண்டு இடங்களில் விராட், ரோகித்

சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், ஐசிசியின் ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் கேப்டன் விராட் கோலி மற்றும் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

855 புள்ளிகளுடன் ரோகித் 2வது இடம்

855 புள்ளிகளுடன் ரோகித் 2வது இடம்

கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் 829 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 3வது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் 719 புள்ளிகளுடன் பௌலர்கள் வரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா இரண்டாவது இடத்தில் நிலைப்பெற்றுள்ளார். முதலிடத்தில் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் உள்ளார்.

பால்பிர்னி 4 இடங்கள் முன்னேற்றம்

பால்பிர்னி 4 இடங்கள் முன்னேற்றம்

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக மோதிய தொடரை கைப்பற்றியுள்ள ஐயர்லாந்து அணி வீரர்கள், இந்த தரவரிசைப்பட்டியலில் முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். ஐயர்லாந்தின் கேப்டன் ஆன்ட்ரூ பால்பிர்னி நான்கு இடங்கள் முன்னேறி 42வது இடத்தில் உள்ளார். இதேபோல துணை கேப்டன் பால் ஸ்டர்லிங் ஒரு இடம் முன்னேறி 26 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அடேய்ர் 6 இடங்கள் முன்னேற்றம்

அடேய்ர் 6 இடங்கள் முன்னேற்றம்

இதேபோல பௌலிங் வரிசையில் ஐயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் யங் 40 இடங்கள் முன்னேறி, 89 இடத்திற்கு தாவியுள்ளார். மார்ச் அடேய்ர் 6 இடங்கள் முன்னேறி 138வது இடத்தில் உள்ளார். இதேபோல இறுதி ஒருநாள் போட்டியில் சதமடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ஒரு இடம் முன்னேறி 22வது இடத்தில் உள்ளார்.

Story first published: Thursday, August 6, 2020, 16:44 [IST]
Other articles published on Aug 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+