Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை பட்டியல்.. உலககோப்பையில் கெத்து காட்டிய கோலி, ராகுல் உயர்வு

துபாய் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் வாரம் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டதால் தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் முன்னேற்றத்தை கண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 ரன்கள் குவித்ததை அடுத்து அவர் தற்போது தரவரிசை பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

ICC odi rankings Latest - Virat kohli and KL Rahul rises in the list

இதேபோன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பராக களம் இறங்கியுள்ள கே எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 97 ரன்கள் அடித்து இருந்தார். இதன் மூலம் கே எல் ராகுல் தற்போது பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 15 இடங்கள் முன்னேறி தற்போது 17வது இடத்தில் இருக்கிறார்.

அதேபோன்று இந்திய அணியின் தொடக்க வீரர் கில் டெங்கு காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனினும் பாபர் அசாம் முதலிடத்தில் நீடித்தாலும் அவரும் உலகக்கோப்பை தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார். இதனால் அவருடைய தரவரிசை புள்ளிகளும் குறைந்து இருக்கிறது.

இந்த நிலையில் 835 புள்ளிகளுடன் பாபர் அசாம் முதல் இடத்திலும் கில் 830 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே வெறும் 5 புள்ளிகள் தான் வித்தியாசம் இருக்கிறது.இதேபோன்று தென்னாப்பிரிக்கா வீரர் டி காக் தன்னுடைய கடைசி ஒரு நாள் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ஒரு இடம் முன்னேறி தற்போது ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

டி காக்கும், விராட் கோலிக்கும் இடையே வெறும் ஒன்பது புள்ளிகள் தான் வித்தியாசம் இருக்கிறது. இதனிடையே ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகமது சிராஜ் தற்போது அந்த இடத்தை பறி கொடுத்திருக்கிறார். சிராஜ் தற்போது 664 புள்ளிகள் பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் முதலிடத்தில் நீடிக்கிறார்கள்.

Story first published: Wednesday, October 11, 2023, 17:40 [IST]
Other articles published on Oct 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+