For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

48 ஆண்டு உலககோப்பை வரலாற்றில் இந்தியா சாதனை.. விளையாடிய 5 பேட்ஸ்மேன்களும் படைத்த ஒரே மைல்கல்

பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நினைத்தது போலவே ஒரு இமாலய சாதனை படைத்திருக்கிறது. 48 ஆண்டுகால உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அணியும் செய்யாத ஒரு மைல் கல்லை இந்தியா தொட்டிருக்கிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரன் குவிப்பு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய போது ரோகித் ஷர்மா கில் ஆகியோர் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

ICC ODI World cup 2023 - 5 Indian batsman scored half century created record

கில் 51 ரன்களும், ரோகித் சர்மா 62 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்க மூன்றாவது விக்கெட்டுக்கு விளையாடிய விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ராகுலும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அபாரமாக விளையாடினர்.

இதன் மூலம் இந்திய அணி ஒரு புதிய ரெக்கார்டை படைத்திருக்கிறது. அதாவது உலகக் கோப்பை போட்டியில் களம் இறங்கிய ஐந்து பேட்ஸ்மேன்களும் அரை சதம் அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும் இதில் ஸ்ரேயாஸ் தன்னுடைய அரை சதத்தை சதமாக மாற்றி இருக்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி விளையாடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அரைசுதம் அடித்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.

முதல் இரண்டு முறையும் ஆஸ்திரேலியா அணி தான் இத்தகைய சாதனையை படைத்திருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு பிறகு இந்தியா தான் இந்த சாதனையை தொட்டு இருக்கிறது .அரை இறுதிக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருப்பது பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, November 12, 2023, 17:59 [IST]
Other articles published on Nov 12, 2023
English summary
ICC ODI World cup 2023 - 5 Indian batsman scored half century created record 48 ஆண்டு உலககோப்பை வரலாற்றில் இந்தியா சாதனை.. விளையாடிய 5 பேட்ஸ்மேன்களும் படைத்த ஒரே மைல்கல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+