Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது என்ன புது புரளியா இருக்கு? தீபாவளி அன்று பச்சை நிற ஆடை.. கோலி மீது சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது தேவையில்லாத சர்ச்சையை ரசிகர்களின் சிலர் தரப்பினர் கிளப்பி வருகிறார்கள்.

கோலி எது செய்தாலும் தவறு என்று சொல்லும் அந்த ரசிகர்கள் தற்போது தீபாவளி அன்று கோலி அணிந்த ஆடையின் நிறம் ஏன் இவ்வாறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு கிளம்பி விட்டார்கள்.

ICC ODI World cup 2023 - Fan asking about virat kohli dress colour during deepavali celebration

இன்று தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது ஹோட்டலில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். வீரர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தங்களது குடும்பத்தினருடன் பொழுதை கழித்தனர். அப்போது அங்கு இருந்த ரசிகர்களுடன் இந்திய அணி வீரர்கள் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இந்திய அணி வீரர்கள் அழகான ஆடைகளை அணிந்து போஸ் கொடுத்தனர். அதில் விராட் கோலி பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருந்தார். இதனை குறிப்பிட்டுள்ள ரசிகர் ஒருவர் தீபாவளி என்பது இந்தியாவின் பண்டிகை. அனைவரும் சிவப்பு, நீலம் என்று ஆடை அணிந்து இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு வீரர் மட்டும் ஏன் பச்சை நிறத்தின் ஆடை அணிந்திருக்கிறார்.

இதற்கு காரணம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த பச்சை பிற ஆடையை விராட் கோலி மட்டும் தான் அணிந்திருந்தார். இதற்கு கடுப்பான ரசிகர்கள் ஏன் தீபாவளி அன்று பச்சை நிறத்தில் ஆடை போடக்கூடாதா? ஆடையில் என்ன இருக்கிறது? ஏன் அனைத்திலும் தவறாக பார்க்கிறீர்கள்? இந்த நிறம் இதற்கு தான் பயன்படுகிறது என்று ஏன் நீங்களே ஒரு கற்பனையை உருவாக்கிக் கொள்கிறீர்கள்?

இந்திய தேசிய கொடியில் கூட பச்சை நிறம் இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் வெளுத்து வாங்கினர். மேலும் சிலர் தீபாவளியன்று சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி பச்சை நிற ஆடையை அணிந்திருக்கிறார் என்று கிண்டல் அடித்து வருகிறார்கள். ஒரு வீரரின் ஆடை நிறத்தை வைத்துக் கூட சர்ச்சையை கிளப்பும் ரசிகர்கள் மத்தியில் தான் விராட் கோலி இத்தகைய சாதனைகளை படைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 12, 2023, 19:43 [IST]
Other articles published on Nov 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+