பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பெங்களூர் மைதானம் ரன் குவிப்பிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்வதால் அதிக ரன்கள் குவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்றைய தீபாவளி நாளில் ரசிகர்களுக்கு வானவேடிக்கையை வீரர்கள் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் டாஸ் எங்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டாஸ் எப்படி விழுந்தாலும் எங்கள் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்திலும் எங்களுடைய வீரர்கள் அனைத்து பிரிவிலும் சிறப்பாக செயல்பட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
எங்கள் அணியின் செயல்பாட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் கேப்டனாக என்னுடைய பணி எளிதாக இருக்கிறது. நாங்கள் ஒரு வார ஓய்வுக்குப் பிறகு இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறோம். அதனால் எந்த வீரருக்கும் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் ஓய்வு வழங்கவில்லை. அதே 11 வீரர்களைக் கொண்ட அணியை தான் களம் இறக்குகிறோம் என்று ரோகித் சர்மா கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வார்ட்ஸ் தாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தும். ஆனால் ஆடுகளம் மிகவும் ரன்குவிப்புக்கு சாதகமாக இருப்பதால் சேஸிங் செய்வதும் சுலபமாகத்தான் இருக்கும். நாங்கள் இந்த தொடரில் இரண்டு வெற்றியை பெற்றிருக்கிறோம்.
இன்றைய ஆட்டத்தில் ஒரு நல்ல செயல்பாடு வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த தொடரில் நாங்கள் இவ்வளவு பெரிய மக்களுக்கு எதிராக இன்று தான் முதல் முறையாக விளையாடுகிறோம். நாங்கள் இன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று நெதர்லாந்து கேப்டன் எட்வார்ட்ஸ் கூறினார்.