சாதனை படைத்த ரோகித், கில் ஜோடி.. இருவருமே வாய்ப்பை வீணச்சிட்டாங்க.. விவரம் இதோ
மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து எதிர்கொண்டு விளையாடி வருகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சிறிய மைதானம் , ரன் குவிப்புகள் சாதகமான ஆடுகளம் என்பதால் 350 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்று நெருக்கடியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நெதர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார்கள். இருவருமே தங்களுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இந்திய அணி நட்சத்திர வீரர்கள் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் நான்கு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 51 ரன்னில் வெளியேறினார்.
இதேபோன்று தொடக்க வீர ரோகித் சர்மா 54 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து பெவலியின் திரும்பினார். இதில் எட்டு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா ஜோடி 100 ரன்களை சேர்த்திருக்கிறார்கள்.
இதன் மூலம் இந்த ஜோடி ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது. அதாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் அதிக 100 ரன்களை சேர்த்த ஜோடி என்ற பெருமையை ரோகித் சர்மாவும் கில்லும் படைத்திருக்கிறார்கள்.
நடப்பாண்டில் மட்டும் அவர்கள் ஐந்து முறை 100 ரன்களை கடந்து இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இப்ராஹிம் மற்றும் குர்பாஸ் ஆகியோர் இருக்கிறார்கள்.
மூன்றாவது இடத்தில் மூன்று முறை 100 ரன்களுக்கு மேல் அடித்து நிஷாங்கா மற்றும் கருணரத்னே ஜோடியும் குசல் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஜோடியும் உள்ளனர். இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணமாக தொடக்க ஜோடி இருக்கிறது. இருவரும் அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளத்தை இந்திய அணிக்கு கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications