For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி கிடையாது.. இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் கடவுள் இவர் தான்.. இங்கிலாந்து வீரர் வாஹன் கருத்து

மும்பை : ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் முதல் முறையாக 700 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு சேர்ந்துள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் ஒரு மதம் என்றால் சச்சின் தான் அதன் கடவுள் என்று ரசிகர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. இன்றுவரை கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் என்றுதான் ரசிகர்கள் பாராட்டி வருவார்கள்.

ICC ODI World cup finals - Micheal vaughan predicts gill ill became next god of indian cricket

ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கிரிக்கெட்டின் கடவுள் இனி வேறொரு வீரர் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். சச்சினுக்கு பிறகு விராட் கோலி தான் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் .ஆனால் மைக்கேல் வாகன் விராட் கோலியை அந்த லிஸ்டில் சேர்க்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வாகன் சச்சினிடமிருந்து கிரிக்கெட் பாரம்பரியம், புகழ் ஆகியவற்றை விராட் கோலி பெற்றுக்கொண்டார். எனக்கென்னவோ விராட் கோலி இடமிருந்து அந்த புகழ் பாரம்பரியம் அனைத்தும் சுப்மன் கில்லுக்கு செல்லும் என தோன்றுகிறது. இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கடவுளாக கில் தான் வருவார் என்று தோன்றுகிறது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

கில் கோலியை போல் அண்டர் 19 கிரிக்கெட்டில் சாதித்து தான் சீனியர் அணிக்கு கில் திரும்பி இருக்கிறார். நடப்பாண்டில் மட்டும் 2000 சர்வதேச ரன்களை கில் அடித்துள்ளார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 101 என்ற அளவில் இருக்கிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் கில்லுக்கு தான் உள்ளது.

தற்போது வரை கில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஏழு சதம், ஒன்பது அரைசதம் அடித்திருக்கிறார். இதேபோன்று நடப்பாண்டில் மட்டும் கில் ஒரு இரட்டை சதம் உட்பட ஐந்து சதம் அடித்து 2023 ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி எவ்வாறு சச்சின் ரெக்கார்டை உடைத்தாரோ அதேபோல் கில் விராட் கோலி ரெகார்டை உடைப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Thursday, November 16, 2023, 17:20 [IST]
Other articles published on Nov 16, 2023
English summary
ICC ODI World cup finals - Micheal vaughan predicts that Gill will become next god of indian cricket கோலி கிடையாது.. இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் கடவுள் இவர் தான்.. இங்கிலாந்து வீரர் வாஹன் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+