ஐசிசி விருது: சிறந்த வீரராக கேப்டன் டோணி தேர்வு

2010ம் ஆண்டு முதல் எல்.ஜி. ஐ.சி.சி. விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இந்த விருதுக்கு டோணி, கோஹ்லி, புஜாரா, ஷிகார் தவான், மைக்கேல் கிளார்க், அலெஸ்டர் குக், ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தேர்வாகியுள்ளார். இந்த விருதை பெறும் இரண்டாவது இந்திய வீரர் டோணி.
இதற்கு முன் இந்த விருதை 2010ம் ஆம் ஆண்டு இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்கா சுற்று பயணத்திற்காக, டோணி அங்கு சென்றுள்ளதால் அவர் சார்பாக பி.சி.சி.ஐ., பொதுச்செயலாளர் சஞ்சீவ் பாட்டீல் இந்த விருதை இன்று பெற்றுக்கொண்டார்.
Story first published: Tuesday, December 3, 2013, 13:18 [IST]
Other articles published on Dec 3, 2013


Click it and Unblock the Notifications