இனி ஒன்னு கூட மிஸ் ஆகாது.. நோ-பாலை கண்டுபிடிக்க தனி அம்பயர்.. ஐசிசி அதிரடி திட்டம் ஆரம்பம்!
Recommended Video
மும்பை : இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ள டி20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் வரும் 6ம் தேதி துவங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் டிவி அம்பயர்களை கொண்டு நோ பாலை சோதிக்கும் நடைமுறையை சோதிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் நோ பால் மற்றும் எல்.பி.டபிள்யூ ஆகியவற்றை கவனிப்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளதாக அம்பயர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், டிவி அம்பயர்களை களமிறக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.
கடந்த ஐபிஎல்லில் இந்த நோ பால் சர்ச்சை எழுந்தது. மும்பை பௌலர் மலிங்கா வீசிய நோ - பாலை களத்தில் இருந்த அம்பயர் ரவி கவனிக்க தவறியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடுவர்களின் தவறான முடிவுகள்
ஐபிஎல் போட்டிகளில் அம்பயர்கள் தவறான முடிவுகளை எடுப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. கடந்த ஐபிஎல்-லில் மும்பை பௌலர் மலிங்கா வீசி நோ பாலை களத்தில் இருந்த அம்பயர் ரவி கவனிக்கத் தவறியதை அடுத்து, கோலி மற்றும் தோனி அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தவறுகளை தடுக்க முயற்சி
இந்நிலையில் அம்பயரின் இந்த தவறான முடிவு குறித்து பரிசீலனை செய்த ஐபிஎல் நிர்வாகம், வரும் காலங்களில் இத்தகைய தவறுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் பரிசீலித்து வருகிறது.

ஐபிஎல் திட்டம்
டிவி அம்பயர்கள் மற்றும் களத்தில் உள்ள அம்பயர்களை தவிர்த்து மேலும் நோபாலை கவனிக்க என்று தனி அம்பயர்களை நியமிக்கவும் ஐபிஎல் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா -மேற்கிந்திய தீவுகள் தொடரில் சோதனை
இந்நிலையில் நோ பாலை கவனிக்க டிவி அம்பயர்களை நியமிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. வரும் 6ம் தேதி துவங்கவுள்ள இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடரிலேயே இதை நடைமுறைப்படுத்த ஐசிசி முடிவெடுத்துள்ளது.

டிவி அம்பயர்கள் சோதனை
டிவி அம்பயர்களை கொண்டு நோ பாலை சோதிக்கும் இந்த திட்டத்தை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி தொடரில் மட்டுமின்றி, அடுத்த மூன்று மாதங்களுக்கு சர்வதேச அளவில் நடத்தப்பட உள்ள பல்வேறு தொடர்களிலும் மேற்கொள்ள ஐசிசி திட்டமிட்டுள்ளது.

3வது நடுவரின் பணி அதிகமாகும்
இந்த சோதனைகள் நல்ல பலனை தரும் பட்சத்தில், கடந்த 1992ல் ரன் அவுட்களை சோதிப்பதற்காக நியமிக்கப்பட்ட டிவி அம்பயர்களின் பணி அதிகரித்து அவர்கள் நோ பாலையும் கவனிப்பார்கள்


Click it and Unblock the Notifications