Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை.. சரிந்த பாகிஸ்தான் நட்சத்திரம்.. முன்னேறிய கோலி, ஜெய்ஸ்வால்!

மும்பை: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 3வது இடத்தில் இருந்து சரிந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக வீழ்த்தி வங்கதேசம் வரலாறு படைத்தது. இதனால் பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

icc rankings virat kohli rohit sharma

குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகியும், 2வது இன்னிங்ஸில் 22 ரன்களும் எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெவிலியன் திரும்பினார். சொந்த மண்ணிலேயே பாபர் அசாம் மோசமான ஆடியது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெளியாகியுள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பாபர் அசாம் 6 இடங்களை சரிந்துள்ளார்.

நம்பர் 3ல் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 6 இடங்கள் சரிந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஸ்வான், ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக ரிஸ்வான் 17வது இடத்தில் இருந்து 7 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல் வங்கதேசம் அணியின் சீனியர் வீரரான முஷ்ஃபிகுர் ரஹிம் 7 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து நியூசிலாந்து ஜாம்பவான் கேன் வில்லியம்சன் 2வது இடத்தில், டேரல் மிட்சல் 3வது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் 3 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். அதன்பின் 5வது இடத்தில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் 6வது இடத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இருக்கின்றனர். தொடர்ந்து இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.

மற்றொரு இந்திய ஜாம்பவானான விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 8வது இடத்திற்கு வந்துள்ளார். மேலும் இந்திய அணியின் எதிர்கால கேப்டனான சுப்மன் கில் 18வது இடத்தில் தொடர்கிறார். மேலும் பவுலிங் தரவரிசையை பொறுத்தவரை இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறார்.

2வது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் ஹேசல்வுட் இருவரும் உள்ளனர். 4வது இடத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா இருவரும் இருக்கின்றனர். 6வது இடத்தில் நேதன் லயன் பிடித்துள்ள நிலையில், ஜடேஜா 7வது இடத்திலும் உள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் இந்திய அணி 3 வீரர்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 28, 2024, 14:54 [IST]
Other articles published on Aug 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+