Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை.. அரியாசனத்தை பிடித்த பும்ரா.. உச்சத்தில் ஜெய்ஸ்வால், விரட்டி வந்த விராட் கோலி!

மும்பை: ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்பிரிட் பும்ரா 883 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஜெய்ஸ்வால் 2வது இடத்திலும், விராட் கோலி 13வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணான பெர்த் மைதானத்தில் இந்திய அணி வீரர்களின் ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா 8 விக்கெட்டுகளையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களையும், விராட் கோலி சதமும் விளாசி அசத்தினர்.

ind vs aus yashasvi jaiswal jasprit bumrah

அதேபோல் கேஎல் ராகுலின் அரைசதம், நிதீஷ் குமார் ரெட்டியின் பங்களிப்பு, முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட்-ன் அதிரடி என்று அத்தனை வீரர்களும் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர். இந்த நிலையில் ஐசிசி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில்ல் இந்திய அணி வீரர்கள் ஏற்றம் கண்டுள்ளனர்.

அதில் உச்சமாக இந்திய கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா பவுலர்களுக்கான தரவரிசையில் 883 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவின் ரபாடா 2வது இடத்திற்கும், 2வது இடத்தில் இருந்த ஹேசல்வுட் 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். முறையே இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 4வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 825 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதில் 903 புள்ளிகளுடன் இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் ரிஷப் பண்ட் 6வது இடத்தில் தொடர்ந்து வருகிறார்.

அதேபோல் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் டாப் 20 தரவரிசையில் இருந்து வெளியேற்றப்பட்ட விராட் கோலி, 22வது இடத்தில் இருந்தார். தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சதம் விளாசியதால், 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் தொடர்ந்து முத2 2 இடத்தில் உள்ளனர்.

Story first published: Wednesday, November 27, 2024, 14:13 [IST]
Other articles published on Nov 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+