Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை: ரேட்டிங்கில் எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை படைத்த பும்ரா.. பண்ட், ஜடேஜா அபாரம்

துபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 32 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் கடந்த வாரமே டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்த பும்ரா கிரிக்கெட் ஜாம்பவான் ஷான் வார்னே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் தரப் புள்ளிகளை முந்தி இருந்தார்.

இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா வெறும் பத்து ஓவர் மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். பும்ரா பந்து வீசவில்லை என்றாலும் மீண்டும் தரவரிசை ரேட்டிங்கில் முன்னேறி இருக்கிறார். பும்ரா 907 புள்ளிகளை பெற்று சாதித்த நிலையில் தற்போது மேலும் ஒரு புள்ளிகள் அதிகரித்து 908 புள்ளிகளை பெற்று புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார்.

icc rankings jasprit bumrah rishabh pant

இதன் மூலம் பும்ரா முதல் இடத்தை இந்த வாரமும் தக்க வைத்திருக்கிறார். சிட்னி டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

இதேபோன்று சிட்னி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் பண்ட், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்த பாபர் அசாம் 12வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்திருக்கிறார். டெஸ்ட் பவுலர்களுக்கான பட்டியலில் ஸ்காட் போலண்டும் ஜடேஜாவும் ஒன்பதாவது இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய போலாண்ட் 29 இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார்.சிட்னி டெஸ்ட் போட்டியில் தடுமாறிய கில் மூன்று இடங்கள் பின் தங்கி 23வது இடத்திலும், விராட் கோலி மூன்று இடங்கள் பின் தங்கி 27-வது இடத்திலும் பிடித்திருக்கிறார்கள். இதேபோன்று ரோகித் சர்மா இரண்டு இடங்கள் பின்தங்கி தற்போது 42வது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Wednesday, January 8, 2025, 17:37 [IST]
Other articles published on Jan 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+