Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC ODI Rankings - நம்பர் 1 இடம் பிடிக்க போகும் அணி எது? இது நடந்தால் இந்தியாவுக்கு செம வாய்ப்பு

மும்பை : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க உள்ள நிலையில் அந்தத் தொடரில் நம்பர் ஒன் அணியாக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கு முன் நம்பர் ஒன் அணியாக இருந்த பாகிஸ்தான் அணி ,சூப்பர் ஃபோர் லிக் சுற்றில் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதன் மூலம் அந்த இடத்தை இழந்தது.

ICC Rankings - scenario for India and australia to regain no 1 position in team rankings

இதனை அடுத்து இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. எனினும் வங்கதேசத்துக்கு எதிரான கடைசி சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. எனினும் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது. அதே சமயத்தில் தென்னாப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா அணியும் தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் பாகிஸ்தான் அணி நம்பர் ஒன் இடத்திற்கு சென்றது.

நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்தியா 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு முன்பு மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நம்பர் ஒன் இடத்தை ஆஸ்திரேலியா அணி பிடிக்க வேண்டும் என்றால் அவர்கள் இந்தியாவிற்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை மூன்றுக்கும் பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக வெல்ல வேண்டும். குறைந்தபட்சம் முதல் இரண்டு போட்டிகளில் வென்றால் ஆஸ்திரேலிய அணி நம்பர் ஒன் இடத்திற்கு செல்லும். எனினும் மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றால் இந்த தரவரிசை மீண்டும் மாறும்.

இந்திய அணி பொறுத்தவரை நம்பர் ஒன் இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றாலே நம்பர் ஒன் இடத்தை உறுதி செய்து விடலாம். இன்னும் சொல்லப்போனால் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றாலே நம்பர் ஒன் அணியாக அறிவிக்கப்படும்.

அதேசமயம் இந்திய அணி இன்று தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவினால் பாகிஸ்தான அணி தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக இருக்கும்.இதனால் இந்திய அணி குறைந்தபட்சம் ஒரு போட்டியில் வென்றாலே நம்பர் ஒன் அணியாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்கலாம்.

Story first published: Wednesday, September 20, 2023, 15:56 [IST]
Other articles published on Sep 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+