Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை.. சரிந்த சுப்மன் கில், கேஎல் ராகுல்.. முன்னேறிய குல்தீப் யாதவ்.. முழு விவரம்!

மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சரிவை சந்தித்துள்ளார். அதேபோல் பவுலிங்கில் குல்தீப் யாதவ் 6வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். பவுலர்கள் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய பவுலர் குல்தீப் யாதவ் மட்டும்தான்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பின், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதனை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி இருக்கிறது.

ICC Rankings

அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 781 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி ஆடிய டேரல் மிட்சல் 2 இடங்கள் முன்னேறி 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதனால் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் க்ல் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

விராட் கோலி வழக்கம் போல் 6வது இடத்தில் இருக்கும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 9வது இடத்தில் நீடிக்கிறார். அதேபோல் ரச்சின் ரவீந்திரா 4 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ள நிலையில், கேஎல் ராகுல் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பவுலர்களை பொறுத்தவரை ரஷீத் கான் முதலிடத்தில் தொடர்கிறார்.

இந்திய வீரர்களில் டாப் 10ல் இருக்கும் ஒரே பவுலர் குல்தீப் யாதவ் மட்டும் தான். 634 ரேட்டிங் புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். இதன்பின் ரவீந்திர ஜடேஜா 13வது இடத்திலும், முகமது சிராஜ் 16வது இடத்திலும் தொடர்கின்றனர். அதேபோல் அக்சர் படேல் ஒரு இடம் முன்னேறி 30வது இடத்தை பிடித்திருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்டிங்கில் அபிஷேக் சர்மா மற்றும் பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி இருவரும் முதலிடத்தில் தொடருகின்றனர். அதேபோல் டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். விரைவில் அவர் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, November 5, 2025, 17:45 [IST]
Other articles published on Nov 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+